பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புண்ணியம் ஆம் பாவம்போம்!

அவருடைய அஞ்ஞாதவாசத்துக்கு வசதியான சூழ்நிலை என்று அவர் கருதிய நாகரீகப் பெருநகரம் அவியாத அவருடைய உணர்ச்சிக் கங்குகளை விசிறி நெருப்புப் பொறிகளை மேலெழத் தூண்டுவதற்கும் உரிய சூழலாக அமைந்துவிட்டது. இதை அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் கணமும் உணர்ந்தார். ரோட்டிலும் தியேட்டர்கள் முன்னும், பஸ் ஸ்டாப்பிலும், ஒட்டல் களிலும், அலுவலகங்களிலும், கடலோரத்திலும் - எங்கும் எப்போதும் இதையே உணர்ந்தார். ஒடுங்காத உணர்வும் உள்ளமும் சதா அரிப்பதை அவரால் தடுக்க முடியாமல் போய்விட்டது.

அவர் பார்வையில் எந்நேரமும் பட்டுக்கொண்டிருந்த உல்லாசிகளின் தோற்றங்கள் போக, அவருடன் பேசிப் பொழுதுபோக்கவரும் நண்பர்களின் சுவையான பேச்சுக் களும் அவருடைய உள்ளத்தில் சலனமும் உணர்வில் கிளர்ச்சியும் உண்டாக்கின. ஒரு சிலர் தங்களுடைய ‘அட்வென்ச்சர்களைப் பெரிதாக அளந்தார்கள். சிலர் மற்றவர்களுடைய போக்குகளையும் பண்புகளையும் வர்ணிப் பார்கள். எல்லாரும் ஆண் பெண் விவகாரங் களையும், முறைதவறிய உறவுகளையும் பற்றித்தான் ரசித்துப்பேசினார்கள். அப்படி ஈடுபாட்டுடன் வர்ணிப் பதற்குத் தமது பாதையில் ரசமான அனுபவங்கள் குறுக்கிட வில்லையே, தாம் வேட்டைமீது நாட்டமுற்று முயன்று வெற்றிபெற்றது இல்லையே என்ற வருத்தமும் ஏக்கமும் அவர் நெஞ்சை அரிக்கும்.

அவ்வாறு வாய்ப்பு வலியத் தேடி வந்திருந்தால் கூட அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பயன்பெற்றிருப்பாரோ என்றொரு சந்தேகம் அவருள் அலைமோதாமல் போக வில்லை. பண்பாடு, தர்மங்கள், ஒழுக்கமுறைகள், நல்வாழ்வு, நீதிநேர்மை என்றிருக்கிற, கண்ணுக்குப்