பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 புண்ணியம் ஆம் பாவம்போம்:

வேளைகளில் களிவெறி கொண்டு கூத்தாடுகிறது; எதிர் பார்ப்புகளை விதைக்கிறது; காத்திருத்தலை வளர்க்கிறது.

ஒரு ஆராய்ச்சி மாணவனின் விழிப்பு உணர்வோடு தனது மனசின் இயல்புகளையும் ஆய்வு செய்து வைத்திருந்த அவனுக்கு அன்றைய மனக் குதூகலிப்பின் காரணம் புரியத் தானில்லை. r

இருப்பினும் என்னவோ புதுமை தன் எதிரே வரப் போகிறது என அவன் மனம் அரித்துக் கொண்டே யிருந்தது. -

வழக்கமான அலுவல்களில் நேரம் கரைந்து நாள் வளர்ந்தது. மனிதரின் பலநிலை வடிவங்கள் - குழந்தைகள் சிறுவர் இளைஞர் முதியவர் - இயங்கி உயிர்ப்பூட்டும் பேற்றினைப் பெற்றிராத அந்த பெரிய வீட்டில் சின்னஞ்சிறு குருவிகள் சுதந்திரமாகக் கும்மாளியிட்டன. தத்தித் தத்தி நடந்தன. பறந்து திரிந்து கூச்சலிட்டன. தமக்குள் சண்டை போட்டன. இன்பமாய் விளையாடி மகிழ்ந்தன. இரண்டு குருவிகள் மாறி மாறிக் கண்ணாடியைக் கொத்திக் கொத்தி மயங்கின. - *

அவன் சாப்பிடும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு காக்கை. அவன் தோசைத் துண்டை அல்லது இட்டிலித் துணுக்கை வீசியதும் உற்சாகமாகக் கத்தும். இதர காகங்கள் ஓடி வரும். ஒன்றிரண்டு வாசல் படி ஏறி நெருங்கி வரும்.

உயிரியக்கம் அற்ற அந்த அமைதிச் சூழ்நிலைக்கு ஜீவத் துடிப்பு தந்தன. அவை. அவற்றை அவன் ஆதரித்தான். ஒரு வித நட்புணர்வோடு. அதில் பறவைகளுக்கும் அவனுக்கும் தனி சந்தோஷம் வளர்ந்ததாகவே தோன்றியது.