பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 177

திடீர் சந்தோஷம் பாய்ந்து வந்தது போல் குதித்து வாசல் படியில் உட்கார்ந்தது அழகின் குறள் வடிவம். வண்ணங் களின் இனிய சேர்க்கை. ஒரு சிறு பறவை.

அவன் வாசல் படியை விட்டுச் சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவன் அதிசயமாய் கவனித்தான். -

இதுவரை அந்த அறையினருகிலும் வருகை தந்திராத ஒரு மரங்கொத்திப் பறவை. குஞ்சு.

பறந்து பழகும் போது திசை தெரியாது தடம் மாறி வந்ததோ? வெளிச்சம் மிகுந்த விரிவானில் இதுக்கு வழி தவறிப் போச்சோ? எந்தத் தேடலின் உந்துதல் இதை இங்கே கொண்டு சேர்த்ததோ? - அவன் மனத்தறி எண்ண நாடாவை இழுத்து விட்டது.

அவன் மனசில் ஒரு பொறி வெடித்தது; ஏதோ புதுமை நிகழப் போகிறது என்று உணர்வு சொல்லிக் கொண்டிருந்ததே அது இந்த வருகைக்காகத்தான்.

அந்த அழகிய பறவை மைச்சொட்டுகள் போன்ற கண்களால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

அக்கரிய விழிகளை கூர்மையாய் நீண்டு வளைந்திருந்த அதன் மூக்கை தலையை மென்மையான பட்டு ரோமங்கள் புசுபுசுத்து நின்ற சிறு கழுத்தை இனிய வர்ணங்கள் புதிய டிசைன்களில் விரவிக் கிடந்த அதன் உடல் பகுதிகளை அவன் ரசனையோடு பார்த்தான்.

என் இனிய நண்பனே, உன்னை இங்கு கொண்டு சேர்த்தது எது? இன்றையத் தனிமை உணர்வோ? உன்னுள் கிளர்ந்த ஒரு நட்பு மலர்ச்சியோ? விளக்க முடியாத