பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+

9

3


புண்ணியம் ஆம் பாவம்போம்!

ஆனால், பேதைகள் நிறைந்தது மக்கள் கூட்டம் என நம்பிய அருளானந்தததின் லட்சியம் தமது பணநிலை உயர்ந்துகொண்டே போக வேண்டும்; முடித்தால் புகழும் அதிகார பலமும் வந்து சேர வேண்டும் என்பதுதானே?

ஆகவே, அவர் மக்களின் கீழ்த்தர உணர்வுகளுக்குத் தீனி போடுவதிலேயே தீவிர ஆர்வம் காட்டினார். எமது சக்தி மெது மெதுவாக வேலை செய்யும். கண்ணுக்குத் தெரியாத விதத்தில் ஆழமாகக் கிளையிட்டுப் பரந்து மக்களை ஆட்டி வைக்கும்’ என்று அவர் மகிழ்ந்தார்.

‘சமூகத்தில் மெதுவாகப் பரவி நாச வேலை செய்யும் விஷம் அது. இளம் சந்ததியினரையும் கெடுத்து, அவர்கள் மனசையும், அறிவையும் கறைப்படுத்தும் அசுத்தம் அது என்று அருளானந்தரின் ஏட்டையும் தாளையும் பற்றி நல்லவர்கள் எண்ணினார்கள். பசுமையும் வளமைத் தோற்றமும் காட்டி, தான் வளர்ந்துணை புரியும் நல்மரத்தின் சத்தை உறிஞ்சி நாசம் செய்யும் புல்லுருவி போன்றவர் புதுத் தலைவர் அருளானந்தர். அவர் செயலின் விளைவு இன்று பளிச்சென புரியாது. கால ஒட்டத்தில் சமுதாய வாழ்வே சீர்குலைந்து, மனித உள்ளம் பாழ் பட்டு நசித்துவிடும் என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் வருத்தப்பட்டார்கள்.

காகித ராஜா, காகித நோட்டுகள் சேகரித்து பேங்க் பேலன்ஸை அதிகப்படுத்துவது தான் வாழ்க்கை லட்சியம்; நமது லட்சியம் வெற்றி பெறுவதைக் காணச் சகிக்காத மற்றவர்கள் பொறுமுகிறார்கள். அது மனித இயல்பு’ என்றே கருதினார்.

மக்களின் விழிப்பு உணர்வு, அறிவுக் கனல். சிந்தனைத் தீ ஆகியவைதான் காகித ராஜாவின் கோட்டைக்கு வேட்டு வைக்க முடியும். இன்னும் மக்கள் அவற்றை பெருவாரியாகப்