பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர் மாமேதை. மகாப் பெரியவர். தனக்கென வாழாத் தனிப்பெரும் ஞானி. உலகம் ஏற்றிப் போற்ற வேண்டிய அறிவாளி. அரசியல் நீதிகளை வகுத்துக் காட்டிடும் சாணக்கியர் - இவ்வாறு போற்றினார்கள் பலர். -

அவர்தான் கலியுகக் கடவுள். மக்களை உய்விக்க வந்த அவதாரம். காலத்துக்கு ஏற்றவாறு வழிகாட்டி வாழ்விக்கும் ஒளி விளக்கு. தன்னலகம் துறந்த கலிகால ரிஷி. அவர் கை அசைத்தால் மழை பொழியும். அவர் நாவசைத்தால் அருளு ரைகள் பொங்கி வழியும். அவர் கண்மூடி ஒய்ந்து உட்கார்ந்து விட்டால் நாட்டு மக்கள் வாழ்க்கை அஸ்தமித்துப் போகும். இந்த விதமாகத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள் சில பக்தர்கள்.

அறிவுத் திறனும் சிந்தனை ஒளியும், குயுக்தியும் குள்ளநரித்தனமும் பெற்றிருந்தார் அவர். அவர் நாட்டுக்காக உழைத்தார். மக்களுக்கு நல்லது விரும்பிப் பாடுபட்டார். புகழ் அவரை வந்து சேர்ந்தது. பதவிகளும் கிட்டின.

புகழ்பாடிகளும், முகஸ்துதியர்களும், முதுகு சொறிஞ்சி களும் பஜனைக் கூட்டம்போல் சேர்ந்தார்கள். நீங்களே உலகப்பெரும் அறிவர். அதை இங்குள்ளவர்கள் உணர வில்லை. நீங்களே வழிகாட்டும் வான்பொருள். நீங்களே