பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புண்ணியம் ஆம் பாவம்போம்:

வாழவைக்கும் தெய்வம்! என்று அர்ச்சித்து வந்தார்கள். அவருடைய பக்தர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்தார்கள்.

புகழ் போதையும் அதிகார ஆசையும் பெருமைப் பித்தும் அவரை கிறுகிறுக்கச் செய்தன போலும்!

ஒளி வீசும் விளக்கின் அடியில் இருளே நிழலிடுவது போல், அவரது அறிவொளி அவர் உள்ளத்தில் அகந்தை இருட்டைப் புகுத்தியது போலும்! -

மெத்தப் படித்த மூஞ்சூறை காடிப் பானையில் வீழச் செய்யும் உந்துதல் சக்திபோல், சாதாரண மக்களுக்கெல்லாம் அறிவுரை கூற உதவிய அவருடைய ஞானத்தின் பின்னே அவரையே சுயநலத்தில் தள்ளிவிடும் சிறுமைப்புத்தி குடியிருந்தது போலும்!

‘நான் தியாகங்கள் பலப்பல செய்தவன். நான் எல்லோ ரையும் விட அறிவில், அனுபுவத்தில், ராஜதந்திரத்தில் பெரியவன். திட்டங்கள் தீட்டுவதில் தீரன். வழிகாட்டுவதில் சூரன். ஆலோசனை கூறுவதில் அற்புத வீரன். ஆயினும், இங்குள்ளவர்கள் என்னை சரியாக மதிக்கவில்லை. எனக்குப் பிறகு தோன்றியவர்கள், என்னைவிடத் தாழ்ந்தவர்கள், வேகமாக உயர்ந்து விடுகிறார்கள். உயர்த்தப்படுகிறார்கள் என்று அந்த மகாப் பெரியவருடைய மனம் அடிக்கடி புலம்ப ஆரம்பித்தது. -

எப்படியாவது உலகத்தின் கவனத்திலே நிலைத்திருக்க ஆசைப்பட்டார் அந்தப் பெரியவர், மக்கள் மீது அதிகாரம் செலுத்த தவித்தார். அதனால், பெரிய பதவி, சிறிய பதவிய என்று எதுவந்தாலும் லயக்கெனப் பற்றிக் கொள்ளத் தயாராக இருந்தார். -