பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 & - புண்ணியம் ஆம் பாவம்போம்!

அவை பெருமாளுக்குப் பயம் தந்தன. தனிமையே அவனை அச்சுறுத்தியது. ஆழ்ந்த அமைதி சத்தங்களற்ற இயற்கைச் சூழ்நிலை - அவனைக் கலவரப்படுத்தியது.

கண்கள், வறண்ட கற்பாறைகளின் அடர் வளர்த்தியை, விதம் விதமான அடுக்குகளை, அவற்றின் நீள அகல உயரங்களைப் பிடித்துத் தந்தன. செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் அவனை வளைத்துப் பிடித்துச் சிக்கலில் மாட்டி வைக்கத் தயாராக நிற்பன போல் அவனுக்குத் தோன்றின.

பெருமாள் நடந்து கொண்டிருந்தான். மலையடிவாரச் சிற்றுரிலிந்து புறப்பட்டு, நடந்து, நடந்து, ஏறி ஏறி, மலைப் பகுதிகளுடே வெகுதூரம் வந்திருந்தான். இன்னும் ஏறிப் போயாக வேண்டும் அவன். தனித்து விடப்பட்ட உணர்வு அவனைத் தொல்லைப் படுத்தியது. பெரும் சுவர்கள் மாதிரி ஓங்கி நிமிர்ந்து நின்ற மலைப் பகுதிகள். எங்கெங்கும் காட்சி தந்த மலைமுகடுகள், மலையின் மிக உயர்துரத்து முடிகள் - மொத்தத்தில் கற்பாறைகளின் பூதாகாரத் தோற்றங்கள். அவனை மிகப் பாதித்தன. தான் தனியனாய் இங்கு வந்து அகப் பட்டிருக்கவேண்டாம் அவன் ஏற்றுக் கொண்ட பணியை வேறு ஒருவன்னிடம் கொடுத்திருக்கலாம் என்று அவனுள் எண்ணம் இடியது.

ஊர்க்காரர்கள் - முக்கியமாக பெண்கள் - அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தபோது அவன் துணிச்சலோடுதான் கிளம்பினான். நீண்டு, நெடிது உயர்ந்து, பசுமையாய் வளர்ந்து காணப்பட்ட மலைத்தொடர்மீது, மலையின் மீது மலையென ஓங்கி நின்ற மலைப் பகுதிகள் இரண்டு மூன்றைக் கடந்து மேலே போக வேண்டும். அங்கே கோயில் கொண்டிருந்த மலை நம்பிக்கு பூசனை செய்ய அநேகர் போயிருக்கிறார்கள். அவர்கள் முக்கியமான - இல்லாமல் தீராது என்ற தன்மை உடைய இரண்டு பூசைப் பொருள்களை எடுத்துச் செல்ல மறந்து விட்டார்கள்.