பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 223

விடுபட்டுப் போன பொருள்களை மலைமீதுள்ள ஊர்வாசிகளிடம் கொண்டு கொடுக்கும்படி கீழே இருந்தவர்கள் பெருமாளைக் கேட்டுக் கொண்டார்கள். வேண்டுவது போலவும், கெஞ்சுவது போலவும் கோரினார்கள். உனக்குப் புண்ணியம்ப்பா. பூசைக்குரியது. இது இல்லாமல், சாமி குத்தம் ஏற்பட்டுவிடப்படாது’ என்று பெண்கள் பேசினார்கள். ‘நம்பிக்கையான ஆளு வேறு யாருமில்லை. நீதான் போய் இதுகளைக் கொண்டு அவங்ககிட்டே கொடு. நீ இந்தப் பாதையிலேதான் முன்னாலே கூடப்போய் வந்திருக்கியே. நீ ஆம்பிளைதானே ஒத்தையிலே போக முடியாதா என்ன உன்னாலே?” என்று அவனுக்கு உந்துதல் அளித்தார்கள்.

அவனும் பூசைப் பொருள்களுடன் கிளம்பிவிட்டான். அவை ஒரு சுமையும் இல்லை. ஒது துணிப் பையில் கனமற்றே இருந்தன.

பெருமாள் நடந்தான். தனிமையும் தானுமாய் - மலைப் பகுதிகளினூடே சென்ற ஏற்ற இறக்க ஒற்றை யடித் தடத்தின் வழியாக நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே இருந்தது.

கற்சுவரென, பெரும் மதிலென, வளர்ந்து காணப்பட்ட மலையின் தொடர்பகுதிதான் அவனுக்குத் துணை வந்தது. அதன் தோற்றம் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்தியது. அதனுடைய உயரமும், பரப்பும், சர்வ வியாபகமும் அவனை என்னவோ செய்வது போலிருந்தது. மலையின் நெடுகிலும், பள்ளத்தாக்கு களிலும், சரிவுகளிலும், துரத்து உயர்முடிகளிலும் மெளனமாய் நின்ற மரங்களின் அடர்த்தியும், காட்டின் செறிவும், மிகமிக உயரே விரிந்து கிடந்த வானமும் அவனைச் சின்னவனாய், அல்பமாய், உணரச்செய்தன. இவற்றின் அருகே, இவற்றின் நடுவே, நாம் மிகச் சிறு உருவம்; நாம் ஒன்றுமே யில்லை என்றொரு நினைப்பு அவனுள் ஊர்ந்தது.