பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஆம் பாவம்போம்!

2

2


அவள் வெற்றிகரமாக இரண்டு பூக்களைப் பறித்து விட்டாள். அந்தப் பெரும்ையிலும் மகிழ்விலும், மேலே யிருந்து “தொபுக்கடீர் என்று கீழே குதித்தாள்; சிரித்தாள்.

அவர் பயந்துவிட்டார். “ஏட்டி, இப்படிக் குதிக்கலாமா? காலு கையி முறிஞ்சிதுன்னா?” என்றார்.

‘எனக்குத்தான் அடிபடலியே! என்று கூவியபடி, அவள் குதித்தாள், ஓடினாள்.

“ஏ வள்ளி ஏட்டி மெதுவாப் போ. மழை பெஞ்ச தரை: வழுக்கி விட்டிரும். கீழே விழுந்து முழங்காலைப் பேர்த்துக்கிட்டு அழப்போறே!’ என்று கலவரத்தோடு நல்ல வார்த்தைகள் சொன்னார்.

அவள் ஏன் கேட்கிறாள்! ஓடினாள். அங்கிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தாள். கிணற்றைச்சுற்றிக் கட்டியிருந்த துவளத்தின் மீது உன்னிச் சாய்ந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள்.

பெரியவருக்கு உண்மையாகவே பயம். ‘சே, இந்தப் புள்ளெ எத்தினி தொல்லை தருது: சனியன் கொஞ்ச நேரம் கூடச் சும்மா இருக்கமாட்டேன்குதே!’ - மனம் அலுத்துக் கொண்டது. அவர் வேகமாகக் கிணற்றருகே போனார். “ஏட்டி, உனக்கு பயமாயில்லே? கிணத்தை இப்படி எட்டிப் பார்க்கியே, உள்ளே விழுந்தா என்ன செய்வே? என்றார்.

‘தண்ணி ஆழத்திலே கிடக்குது. தெரியமாட்டேன்குது. அதுதான் எட்டிப் பார்த்தேன்’ என்று சகஜமாகப் பேசி. தரை மீது கால் பதிந்து நின்றாள் வள்ளி.

‘கிணத்தை எல்லாம் எட்டிப் பார்க்கப்படாது. ஆமா’ என்று சிரத்தையோடு உபதேசித்தார் அவர்.