பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புண்ணியம் ஆம் பாவம்போம்:

ஒவ்வொரு கடலையாய் வாயில் போட்டுச் சுவைத்தபடி மெது நடை நடந்தான்.

பெருகி வந்த ஜனவெள்ளம் போனசுவடு புரியாதபடி வடிந்திருந்தது. ரோடுகள் வெறிச்சிட்டக் கிடந்தன.

வேர்க்கடலையைத் தின்று தீர்த்த பிறகு, பொட்டலம் கட்டியிருந்த தாளில் சுவையான செய்தி ஏதாவது தென்படாதா என்ற பசியுடன் அதை விரித்துப் பார்த்தான். ரசமானதுணுக்கு அவன் பார்வையில் பட்டது.

“ஒரு நிமிஷம் என்று அல்பமாகக் கருதப்படுகிற நேரத்தில் உலகத்தில் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று விடுகின்றன. உதாரணமாக, ஒரு நிமிஷ நேரத்தில், அறுபது கோடிப் பேர் கொட்டாவி விடுகிறார்கள். நூறு பேர் செத்துப் போகிறார்கள். முப்பத்திநாலு திருமணங்கள் நடை பெறுகின்றன. நூற்றுப்பதினான்கு குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு லட்சத்து எண்பதாயிரம் டெலிபோன் கால்கள் கூப்பிடப் படுகின்றன. அறுபதுலட்சம் சிகரெட்டுகள் புகைக்கப்படுகின்றன. ஆறுலட்சத்து முப்பதாயிரம் காலன் மது குடிக்கப்படுகிறது. நாலாயிரம் டன் உணவுப் பொருள் தின்று தீர்க்கப்படுகிறது...” -

பேஷ் பேஷ்!” என்று ரசித்தான் சோமு. இது மாதிரியான புள்ளி விவரங்களையெல்லாம் எபபடித்தான் சேகரிக்கிறாங் களோ தெரியலே, இந்த நாகரிகப் பெருநகரத்தில் மட்டும், ஒரு நிமிஷத்தில் எத்தனை கப் காப்பி விழுங்கப்படுகிறது, எத்தனை ஆயிரம் இட்லி குளோஸ் செய்யப் படுகிறது. எவ்வளவு காலன் சாம்பார் காலி ஆகிறது என்று எந்த ஆராய்ச்சியாளனாவது கணக்கிட்டுச் சொன்னால், அவனுக்கு ஸ்பெஷலாக ஒரு சிலை நிறுத்த ஏற்பாடு செய்யலாம்!

‘ஐடியா என்று தன் எண்ணத்தைத் தானே பாராட்டி மகிழ்ந்தான் அவன்.