பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவர் குமட்டுர்க் கண்ணணுர்

மாடமாளிகை அமைந்து ஒரு மாநகராய்க் காட்சி அளித்த ஓர் இடம், ஒரு சில ஆண்டுகள் கழித்து நோக்கிய போது, மண்மேடாகக் காட்சியளிப்பதும், மலையும், காடும் மண்டிக்கிடந்த ஒர் இடம், ஒரு சில ஆண்டுகளில் அழகிய நகராக ஆகிவிடுவதும், அன்றுதொட்டு இன்றுவரை நிகழும் உலகியல் முறையாகும். அதைப்போலவே, ஒரிடத்திற்கு ஒருகாலத்தில் இட்டபெயர், சில ஆண்டு கழிவதற்குள்ளாகச் சிதைந்து உ ரு வு தி ரி ந்து வேருகிவிடுவதும், உலகியல் நிகழ்ச்சியாம். உலகியல் அதுவாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே இருந்த ஒரு மாநகர், இன்றும் அப்படியே இருக்கும் என்ருே, அப்படியே இருப்பதானுலும், அந்நகர்க்கு அன்று இட்டபெயர், இன்றும் இட்டது இட்டவாறே வழங்கு கிறது என்ருே கூறுவது இயலாது. ஆகவே, புலவர் கண்ணனர் பிறந்த குமட்டுரை, அறிந்துகொள்வது அத்துணை எளியசெயலன்று. -

ஆந்திர நாட்டுக் கு ண் டு ைர, ஒரு கல்வெட்டு, 'குமட்டுரு' என்று கூறுகிறது. (A. R. 83 of 1917) புதுக்கோட்டைச் சித்தன்னவாசல் கல்வெட்டு ஒன்றில், 'யோமி நாட்டுக் குமட்டுர்’ என்ற தொடர் காணப்படுகிறது, (P. S.Ins, No. 1) அத்தொடரில்வரும் யோமிநாடு' என்பது, திண் டி வ ன ம், மதுராந்தகம் வட்டங்களைக் கொண்டதாய், சிறுபாணுற்றுப்படையால் சிறப்பிக்கப் பெறுவதாய, ஒய்மாநாடாகக் கருதுகின்றனர், சில கல்வெட்டு ஆராய்ச்சியாளர். அதற்கேற்ப, திண்டிவனத்திற்கு அணித்

1