பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் காதுகளில் வந்து விழுந்த அக்கணமே, அச்செய்தியை அவனியில் உள்ளார் அனைவர்க்கும் அறிவித்து, அந்நாழிகையே அமர்க்களம் நோக்கி, அவர்களையும் விரட்ட வேண்டும், தாமும் விரைய வேண்டும் என்ற ஆர்வம் மிக்குடையராய முரசறைவோர், போர்முரசை நீராட்டிப் பூசை செய்து, குருதிகலந்த தினதுாவிப் பலியிட்டுப் பரவி வழி பாட்டை முடித்துக் கொண்டு, முரசடிக்கும் கடிப்பைக் கைபிடிக்க வெற்றிக்கொடி விறங்கும் வலத்தோள் துடிக்க, வேந்தன் ஆணையை எதிர்நோக்கிக் காத்திருப்பர். போர்ச் செய்திகேட்ட பின்னர்க் கவசம்பூனுவதாயின், காலம் கடந்துவிடும் என்ற கருத்துடைய வீரர்கள், போர்என்றவுடனே பாய்ந்து களம்புக வேண்டும் என்ற பேராசையால்' போர்ப்பயிற்சி பெற்று, முதன் முதலாகக் களம் புகுந்த அன்று பூண்ட, கவசத்தைக் கழற்ருமலே களம் காணத் துடித்து நிற்பர். தன் நாற்படைகள் இவ்வாறு தனியாப் போர் வேட்கையின ராதற்கு இமயவரம்பன்பால் பொருந்திருந்த போர்வெறியே காரணமாம். இவ்வியல்பினவாய பெரும் படைக்குத் தலைவனாம் இமயவரம்பனும், எப்பொழுது காணினும், வில்லையும் அம்பையும் வாளையும் வேலையும் ஆராய்ந்து ஆராய்ந்து, அவற்றுள் நல்லனகாணும் நிலையி லேயே காட்சி அளிப்பான். .

இமயவரம்பனும், அவன் நாற்படையும் இவ்வாறு எந்நேரமும்போர் வேட்கைவுடையராகவே விளங்கினமையால், சேரநாட்டின் சினம்பெற்ற சின்னஞ்சிறு நாடுகளெல்லாம், வாழ்விழந்து போயின. தம் நாட்டகத்தே வாழமாட்டாப் பகைநாட்டுப் பெருங்குடிகள் அனைத்தும், தம்நாடுகளைத் துறந்து மறந்து, வேற்று நாட்டு மண்ணில் குடிபுகுந்தன. மக்கள் வாழ்விழந்து போகவே,அவர்கள் ஓம்பிய ஆவும் மாவும் கூட, அந்நாட்டைவிட்டு அகன்று போயின. மக்களையும்

91