பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு வழிவழியாகப்பெற்ற வளத்தால் சிறந்து விளங்கிய நாடுகளெல்லாம், இமயவரம்பன் சினத்தீப்பட்டு அழிந்து பாழாகும் நிலை புலவர்க்கு, மாற்ருெளுத் துயர்தந்தது. அந்நிலையில், எண்ணிலா நாடுகளைப் பாழ்செய்து பார்த்த பி ன் ன ரு ம், இமயவரம்பன் போர் வேட்கை தணியாதிருப்பதும் பாசறை வாழ்க்கையை கைவிடா திருப்பதும், புலவர், கண்ட இனியும் வாளா இருப்பின், உள்ள ஒருசில நாடுகளும் அழிந்துபோம். ஆகவே, அது நிகழாவண்ணம் தடுக்க வேண்டுவது தம் கடன், என எண்ணினர். எண்ணியதோடு நி ல் ல து, அவன் உறையும் பகைநாட்டிகத்துப் பாசறை நோக்கிப் புறப்பட்டும் விட்டார்.

புறப்பட்ட புலவரை, மேற்கொண்டு செல்லும் பெரும் பணியை, விரைந்து செய்தருளுமாறு, மற்ருெரு நிகழ்ச்சியும், தூண்டித் துணைபுரிந்தது. அரண்மனையை விட்டு வெளிப்படும் நிலையில் அரசமாதேவியார் எதிர் வருவதைப் புலவர் கண்டார். அன்பு, நாண் ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை என்ற ஐம்பெரும் பண்புகளின் கோயிலாகக் காட்சியளிக்கும் அரசியாரின், படர்ந்து அகன்ற நெற்றி, அரசமாதேவியர்க்கு, இயல்பான பேரொளியைக் குறைவற வீசிக்கொண்டிருந்தது என்ருலும், அவர்தம் உள்ளத்துயரைப் புலப்படுத்தும் ஒரு சிறிய துன்பக்கீறலும், அப்வொளியிடையே காட்சி அளிப் பதைக் கண்டார். உயர்குடி மகளிர்க்கு உயிரினும் சிறந்ததான நாண் எனும் நற்பண்பு குடிகொண்டிருக்கும் அவர் மேனி, சிறிதே நலங்கெட்டிருப்பதையும் கண்டார். அம்மையார் அரசர்பால் கொண்டிருந்த ஆழ்ந்த காதலை அறிந்தவர் புலவர். ஒரு இமைப்பொழுது பிரிவையும் தாங்காது அவர் உயிர் ஆயினும் அரசர்க்கு ஒதிய அறங்களுள், தலையாயது நாடு காவல் என்பதை அறிந்தவராதலின், அரசர் போர்மேற் சென்றதால் நேர்ந்த பிரிவை, ஒருவாறு தாங்கியுள்ளார்.

93