பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் அப்பிரிவுத் துயர் நாள் ஏற ஏற உரம் ஏறி அரசியாரை, அலைக்கழிக்கலாயிற்று அத்துன்பத்தைத் தாங்கவல்ல மனவலி இருந்தாலும், அதற்கேற்ற மெய்வலி இல்லாத அரசியார் உயிர், உடலைவிட்டு, என்ருே பிரிந் தோடியிருக்கும். ஆனால் கடமையைக் கருத்தில் நிறுத்தித் துயர் பொறுத்துப் பகற்போதைக் கழித்துவிடும் அரசியார், இரவில், உறக்கம் அற்று நெடிது உழன்று இறுதியில் அயர்ச்சி மிகுதியால், தம்மை மறந்து சிறிதே கண்ணயரும் நிலையில், பகை மேற்சென்ற அரசர், வாகைமாலை சூடி விரைந்தோடி வந்து சேர்ந்தது போலவும் அதனால் தன் துன்பமெல்லாம், மறைய, இன்பவெள்ளத்துள் ஆழ்ந்து விட்டது போலவும், காணும் கனவுதரும் இன்பமே, அம்மை யாரவர்களை இன்னமும் உயிரோடு உலாவச் செய்துவருகிறது. இன்றேல், அவர்கள் என்ருே மாண்டுபோயிருப்பர், அரசமாதேவியாரின் தோற்றமும், அவர்தம்துன்பநிலையும் புலவரை, ஒரு கணமும் தாழ்க்காது, அரசரை நோக்கித் துரத்தின.

பகைநாட்டுப் பாசறைக்கண், மேற்கொண்டு புரியப்போகும் போர்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து கிடந்த அரசன் முன் சென்று நின்ற புலவர், பகை நாட்டுப் பாழ்ப்பட்ட காட்சிகளையும், மனைக்கிழத்தியின் மாளாத்துயர்க் கொடுமை யையும் படம்பிடித்துக்காட்டுவார் போல், எடுத்துக் கூரும் முகத்தான், இமயவரம்ப, போர் வேட்கையிலேயே கருத்துடையனாய் ஈண்டே இருந்துவிடின், உன் கோப் பெருந்தேவிக்குப், பெரும்பிழை புரிந்தவன் ஆகுவை, உன் வருகையொன்றே, அவளை இந்நிலையில் வாழ்விக்க வல்லது. அதையும் விரைந்து மேற்கொண்டால்தான் பயன் காணல் இயலும். மனைவியை மாளாத்துயரில் விடுத்து, ஈண்டிருந்து நீ, செய்த செயல்களும், இனிச் செய்ய இருக்கும் செயல்களும்,

94