பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனம்தோடு அகல ஊருடன் எழுந்து, நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்து, நீ வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் அன்ன ஆயின. பழனந்தோறும் 20 அழல்மலி தாமரை ஆம்பலோடு மலர்ந்து,

நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப, - அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர் தீம்பிழி எந்திரம், பத்தல் வருந்த இன்ருே அன்ருே தொன்ருேர் காலை 25 நல்லமன் அளியதாம், எனச் சொல்லிக்

காணுநர் கையுடைத்து இரங்க மாளு மாட்சிய, மாண்டன பலவே !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்துக்கு பெயர் : வளன் அறுபைதிரம்

நீ வாழ்தல் ஈயா வளனறு பைதிரம் (18) இனந்தோடு அகல (16) நிலங்கள் வாட (17) அன்ன ஆயின (19) மலர்ந்து பூப்ப (12) பந்தல் வருந்த (23) நல்ல மன் அளிய எனச் சொல்லிக் கானுநர் இரங்க (26) பல மாணா மாட்சிய மாண்டன (27) ஆகவும் கூளியர் சுரன் அறுப்ப வயவர் உறை கழிப்ப இயவர் தோள்.ஒச்ச அவ்வினை மேவலையாகலின் (1-10) அரிவைக்கு யார்கொல்? அளியை என முடிக்க.

நி வாழ்தல் ஈயா = இருந்து வாழ்தற்குரிய வாய்ப்பினை நீ நல்காமையால், வளன் அறு பைதிரம்=தம் வளம் அற்றுப் போன பகை நாடுகள், இனந்தோடு=ஆடும் மாடும் முதலாம் கால்நடைச் செல்வங்கள். ஊருடன் எழுந்து அகல =

96