பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊராரோடு கூட்டமாய் எழுந்து ஓடிவிடவும். நாஞ்சில் கடிந்து = மக்களும் மாவும் அகன்றுவிட உழதொழில் அழிந்து விட்டமையால். நிலங்கள் வாட = விளைநிலங்கள் வளம் இழந்து போகவும். அன்ன ஆயின = அத்தகைய அழிநிலையுடையவாயின. பனழந்தோறும் = நீர் நிலைகளெல்லாம் அழல்மலி தாமரை - செந்தழல் நிகர்க்கும் தாமரை மலர்கள். ஆம்பலொடு மலர்ந்தது = ஆம்பல் மலர் களோடு மலர்ந்தும். நெல்லின் செறுவில் = நெல்விளையும் நன்செய்களில் நெய்தல் பூப்ப = நெயல்தல் மலர்கள் மலரவும். அரிநர் கொய்வாள் மடங்க = நெல்லரிவாரின் அரிவாள்கள், அரிய மாட்டாது வளைந்து போகுமளவு விளைவு பெருகவும். அறைநர் தீம்விழி எந்திரம் = கரும்பாடுவோரின் கருப்பஞ்சாற்றைப்பிழியும் ஆலைகளின் பத்தல் வருந்த= சாறு விழும் விரைவால், அச்சாற்றினை வடித்து வெளிப் படுத்தும் கூன்வாய் வளைந்து போகவும். இன்ருே அன்ருே தொன்ருேர்காலை = இன்று நேற்று அல்லாமல் தொன்று தொட்டே நல்ல மன் = நல்லனவாய் இருந்தன; அத்தலம் இன்று இல்லாகிவிட்டதே. அளியதாம் = அந்நாடுகள் நனிமிக இரங்கத்தக்கன எனச்சொல்லி = என்று கூறி காணுநர் கைபுடைத்து இரங்க=காண்போர் கைபிசைந்து கலங்கும்படி. பல பகை நாடுகள் பலவும். மானா மாட்சிய= மீளா மாட்சியைபுடையவாகி ம | ண் பி ழ ந் து போயின. மாண்டன பலவே = அறவே அழிவுற்றுப் போயின. அவ்வாருகவும் கொள்ளைவல்சி = பகைநாடுகளைக் கவர்வதையே விரும்பும் கவர்கால் கூளியர் = மேலும் நடந்து செல்வதையே விரும்பும் கால்களை உடையவராகிய தூசிப் படையினர்கள். உடைநெடு நெறிபோழ்ந்து = கல்லும் மலையும் செறிந்த நீண்ட வழிகளை வெட்டி, சுரன் அறுப்ப = படையோடும் பெருவழியாக ஆக்கி அமைக்கவும். ஒண்பொறிக் கழற்கால் மாருவயவர் = ஒளிவீசும் பொறித்தொழில் அமைந்த வீரக்

97