பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழல்களைக் கால்களில் இருந்து கழற்றி அறியா ஆண்மைமிக்க வீரர்கள். திண்பிணி எஃகம் = உறுதியான காம்புகளில் செறித்த வேற்படையின். புலிஉறை கழிப்ப=புலித்தோலாலான போர்வையை அகற்றிப் போர்க்கு உரியவாமாறு செப்பம் செய்யவும் செங்கள விருப்பொடு = முரசு அடிக்கும் முதுகுடிப்பிறந்த வீரர்கள் குருதிபடிந்து செந்நிறம் பெறும் விருப்பத்தால். கூலம்முற்றிய உருவச் செந்தினை = கூலங் களுள் ஒன்ருகச் சிறந்த நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை, குருதியொடு தூஉய்=குருதியோடு கலந்து தூவிப் பலியிட்டு மண்ணனுறு முரசம் = நீராட்டிக் கொணர்ந்த முரசின், கண் பெயர்ந்து = கண்ணில் குருதி தடவி. கடிப்புடை வலத்தர் = வலக்கையில் ஏந்திய முரசடிக்கும் கோலுடையராய், தொடித்தோள் ஒச்ச = தொடி அணிந்த தோள்களை உயர்த்திப் போர்முரசு முழக்க அடித்தது நிற்க, வம்பு களைவு அறியா= போர் குறித்து காட்டும் கைச்சரக்குகளைக் களைந்து அறியாத, சுற்றமொடு = வீரக்குழாத்தோடு. அம்பு தெரிந்து = நல்ல படைக்கலங்களை ஆராய்ந்து. அவ்வினை மேவிலை = அப்போர் வினைகளையே மேலும் விரும்பும் ஈண்டே உறைகின்றனை. ஆதலின் = ஆகவே. எல்லுநனி இருந்து - பகற்போதில் நின்பரிவால் உண்டான துயரை அரும்பாடு பட்டுத்தாங்கியிருந்தது. எல்லி = இராப்போதில். அரிது பெறுபாயல் - அரிதாகப்பெறும் உறக்க நிலையில். கனவினுள் பெற்ற= கனவில் உன்னை அடைந்ததாகக் கண்டமையால் பெற்ற. சிறுமகிழான் = சிறிய மகிழ்ச்சி காரணத்தால். உறையும் = உயிர்கொண்டு வாழ்பவளும். பெருஞ்சால்பு = பெறற்கரும் பெருமை வாய்ந்த சான்ருண்மைகளால் நிறைந்தவளும். ஒடுங்கிய நானனுமலியாக்கை = உண்நோயால் உருக்குலைந்து ஒடுங்கி நாண் எனும் நற்பண்பால் பொலிந்த மேனி யுடையவளும். வாள்னுதல் அரிவைக்கு = பேரொளிவீசும் நுதலி உடையவளும், ஆகிய உன் மனைவிக்கு= யார் கொல். நீயாராயின. அளியை = நீ மிகவும் இரங்கத்தக்காய்,

98