பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அட்டு மலர் மார்பன்

புலவர் குமட்டுர்க் கண்ணனர், எங்கும் எப்பொழுதும் இமயவரம்பனைப் பற்றியே பேசத் தலைப்பட்டு விட்டார். அவர் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும், இமயவரம்பனைப்பற்றியதாகவே அமையக்கண்ட சிலர், "புலவரே எப்பொழுது பார்த்தாலும், இமயவரம்பன், இமயவரம்பன் என்கின்றீர்களே! யார் அந்த இமயவரம்பன்? யாதவன் பெருமை? ' என்று கேட்டுவிட்டார்கள்.

அவ்வளவுதான் 'யார் என்தலைவன்? என்று கேட்கிறீர்கள் கூறுகிறேன் கேளுங்கள். நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவை வாழிடமாக்கொண்ட காரணத்தால், தன்னைப் பகைத்துக் கொண்ட கடம்பரை அழிக்கும் கருத்துடையாளுய்க், கப்பற்படைத்துணையால் அக்கடலிடைத்தீவை அடைந்து அக் கடம்பர்களை வெற்றிகொண்டு அவர் காவல் மரமாம் கடம்ப மரத்தை வேரொடு வெட்டி வீழ்த்திய வீரம் பொருந்திய கடுஞ்சினக் கோவாம், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே எம் தலைவன். வாழ்க அவன் கண்ணி! புதியோர்களே! இனி அவன் பெருமைகளைக் கூறுகிறேன் கேளுங்கள். கால் ஆழ்களரில் நரி அடும், கண் அஞ்சா வேலாள் முகத்தகளிறு’’ என்பது உ ல கி ய ல், போர் தொடுத்து தன் நாட்டிற்கு வந்திருக்கும் ஒரு பேரரசனைச், சூழ்ச்சிக்கும் வஞ்சனைக்கும் உள்ளாக்கி வென்று துரத்துவது, அந்நாட்டு அரசனுக்கு இயலும். வேந்தன் பேராற்றல் வாய்ந்தவனே எனினும், அவன் வந்திருப்பது, வேற்றுநாடு ஆதலாலும், வந்தோனே எதிர்த்து, நிற்பவன் ஆற்றல் குறைந்தவனேயெனினும் இருப்பது தன் நாட்டவத்தே ஆதலாலும், அவ்வெளியவன்

100