பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக மூட்டுர்' என்ற பெயருடைய, சிற்றுர் ஒன்று இருக்கிறது. ஆக வே , இம்மூட்டுரே, சங்க காலத்து குமட்டுராகவும், கண்ணளுரின் பிறந்தஊராகவும் அமையும் எனல் ஒருவாறு பொருந்தும், -

குமட்டுர்க்கண்ணனர், இமயவரம்பனைப் பாடினர்; அவன் அளித்த உ. ம் ப ற் கா ட் டு ஐந்நூறு ஊர்களும், தென்னுட்டு வருவாயில், முப்பத்தெட்டு ஆண்டு வரை, பாக உரிமையும் அவர்வாழத் துணைபுரிந்துவந்தன என்ற இவ்வளவே, அவர் வரலாருக நாம் அறியத்தக்கன,

ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாகப்பெற்ருர் என்பதால், அவர் அந்தணர் என்பது புலனாகும். கடற்கடம்பெறிந்து யானைமேல் அமர்ந்துவரும் இமயவரம்பனுக்குக், கடலிடை ஒளித்த சூரனும் மரத்தை, அழித்துப், பிணிமுக யானைமீது அமர்ந்து உலாவரும் முருகனையும், காக்கும் கடமை மேற்கொண்ட இமயவரம்பனுக்குக், கா க்கு ம் கடவுளாம் திருமாலையும் உவமைகாட்டும் இயல்பால், கண்ணனரின் கடவுட்கொள்கை, ஒருவாறு புலனுகவும் கூடும்.