பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பகைவர் தம் பெரும்படையின் ஆற்றலைஅழித்துப் புகழ் கொள்ளும் அவன், அப்பகைவர்களின் அழிக்கலாகா அரண்களைக் கண்டு அஞ்சிவிடுவனோ? அரிய காவற்காடு சூழ்ந்தது; ஆழ்ந்த அகழியைக் கொண்டது; நெடிது உயர்ந்த புறமதிலும் அழிக்கலாகா அகமதிலும் அமையப்பெற்றது; அம்புக் கட்டு முதலாம் அரிய பொறிப்படைகள் பொருத்தப் பெற்றது; அகன்ற இடங்கொண்டது என்ற செருக்கால் தன்னைப் பகைப்பவர் அரணைக் கண்டால், இவ்வரணை அழித்து அகத்தே புகுந்து ஆங்கு அமர்ந்தபின் உணவு உண்பதல்லது, அ த ற்கு முன் உண்ணேன்.” எனச் சூளுரைத்து அவ்வாறே செய்து முடிக்கும் செருவல்லவன் எம் சேரலாதன். இவ்வரண் உடையமையால் அன்றோ இவர் எம்மைப் பகைத்தனர் என்ற எண்ணத்தால் மூளும் சினத்தி அவ்வரனைக் கைப்பற்றிக் கொண்டதோடு அடங்கிவிடாது. அகநகர்க்குத் தி முட்டி ஆங்கு எழும் புகை கண்டு அகம்மலர அவ்வகமலர்ச்சியால் அவன் மார்பு மலர்ந்த பின்னரே. அஃது அடங்கும் பகை கண்டு எழும் அவன் சினம், அத்துணைக் கொடிது.

'பகைவர்பால் அவ்வளவு கொடுமையுடையவளாகிய அக்கோமகன், புலவர் பாணர் பொருநர், கூத்தர் என்ற எம்போலும் இரவலர்கள்பால் பேரருள் சுரக்கும் பெரு மானுமாவன் தன்பால் வந்து பரிசில் வேண்டி நிற்பேர்பால் அப்பரிவு பெறும் தகுதி இல்லை என்பதைக் கண்டும், அவரை வாளாப் போகவிடாது, அவர் விரும்பியதை வழங்கியே அனுப்பும் அருள் உள்ளம் உடையவன். அக்கொடைக் குணத்தில் சிறிதும் குறைபாடு செய்யான். உலகத்து உயிர்களை ஒப்ப வேண்டிய கடமையை ஏற்றுக் கொண் டிருப்பது மழை. அது அக்கடமையைக் கைவிட்டு உலகம் அழிந்து போக, பல ஆண்டு பெய்யாது பொய்த்து விடுவது

102