பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுங்கோ யார் என வினவின்=உங்கள் அரசன் யார் என்று கேட்பீராயின், எங்கோ=எங்கள் அரசன், இரு முந்நீர்த் துருத்தியுள் பெரிய கடலிடையே உள்ள தீவில், முரணியோர்த் தலைச்சென்று=எதிர்த்த பகைவர்களாகிய கடம்பர் மீதுபோர்தொடுத்துச் சென்று. கடம்பு முதல் தடிந்த - அவர்காவல் மரமாம் கடம்பை வேரோடு வெட்டி வீழ்த்தி வென்ற, கடுஞ்சின முன்பின் மிக்க சினமும் மெய்வன்மையும் உடைய, நெடுஞ்சேரலாதன் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாவன். அவன் க ண் ணி வாழ்க = அவன் அணிந்திருக்கும் தலைமாலை வாழ்வதாக மாற்ருர் தேளத்து= பகைவர் நாட்டில். மாறியவினை = தனக்கு எதிராக அப்பகைவர் எடுக்கும் சூழ்ச்சினையும் செயலும், வெயில் துகள் அனைத்தும் = வெயிலிடத்தே பரக்கும் மிகச்சிறிய அணுவளவும், வாய்ப்பு அறியலன் = பயன்பட வாய்ப்பு அளித்து அறியான். கண்ணின் உவந்து = கண்ணெதிரில் கண்டபோது விரும்புவார்போல் தோன்றி. நெஞ்சு அவிழ்பு அறியா = உள்ளத்தால் விரும்பாத, ஒண்ணுர் தேஎத்தும் = உட்பகை கொண்டு ஒழுகுவாரிடத்தும், பொய்ப்பு கனவிலும் அறியலன்=பொய் கூறுதலைக் கனவிலும் செய்து அறியான். ஒன்னர் தேய=பகைவர் அஞ்சி அழியும்படி, ஒங்கி நடந்து= பெருமிதம் தோன்ற நடந்து. படியோர்தேய்த்து=பகைவரை அழித்து. வடிமணி இரட்டும் = தெளிந்த ஒசையினைச் செய்யும் மணிகள் மாறிமாறி ஒலிக்கும். கடாஅ யானைக் கணநிரை அலற = மதநீர் ஒழுகும் யானைக்கூட்டம் மலிந்த பகைவர் படை அலறுமாறு. வியல் இரும்பரம்பின் மாநிலம் கடந்து=அகன்ற பெரிய பரப்பினைக்கொண்ட பகைவரின் பெரிய நாடுகளை வென்று தனதாக்கிக் கொண்டு. புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ=போர்க்களம் பாடும் புலவர்கள் புகழ்ந்து பாராட்டுமாறு பெரும்புகழை நிலைபெறப்பண்ணி வயிரியர் கண்ணுளர்க்கு=வயிரியர் கண்ணுளர்க்கு என்ற

105