பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரொலி, அம்மலைநாட்டு நீர்வீழ்ச்சிகள் எழுப்பும், இனிய ஒலிக்கு நிகராகும் எனக்கூறியுள்ளார்.

'பல்லான் குன்றில் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பின் குழுமூர் ஆங்கண், கொடைக்கடன் ஏன்ற, கோடா நெஞ்சின், உதியன் அட்டில் போல, ஒலி எழுந்து அருவி ஆர்க்கும் பெருவரை'

இதில், சோறு அளித்தவன், உதியன் என்று மட்டுமே கூறப் பட்டுளது. இப்பெருஞ்சோறு, பாரதப் பெரும்போரில் இருதிறப் படைவீரர்களுக்கு அளித்த சோறு அன்று; மாருக, பசித்து வந்து நிற்கும் பாணர், கூத்தர் போலும் இரவலர்க்கு அளித்த பெருஞ்சோறு; அளித்த இடமும் பாரதப்போர்க்களம் அன்று; மாருக, ப ல் லா ன் குன்றை அடுத்த குழுமூர். ஆகவே, இதில் கூறப்பட்டிருக்கும், உதியன், பாரதப்பெரும் போரில், பெருஞ்சோறு அ வரி த் த, உதியன்சேரலாதன் ஆகான். நிற்க,

தாம் பாடிய பாக்களில், வரலாற்றுக் குறிப்பு இடம்பெருத பாட்டு, ஒன்றுகூடி இல்லை; தமிழ்நாடாண்ட அரசர்களின் வரலாறுகளை மட்டுமல்லாமல், வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நாடுகளை ஆண்ட அரசர்களின் வரலாறுகளையும் கூறி யிருப்பவர்; தாம் வாழ்ந்த காலத்து அரசியல் நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், தம் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளையும் கூறியிருப்பவர்; ஆகவே, பண்டைத் தமிழகத்தின் முதற்பெரும் வரலாற்றுப் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர், புலவர் மாமூலனர். அவர், தன் நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட நாடுகளையெல்லாம் தனதாக்கிக் கொண்டு, நாட்டின் பரப்பளவை விரிவுபடுத்திக் கொண்டவ

6