பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னும், இறந்து துறக்கம் எய்திய தன்குல முன்னேர்க்காக, ஆண்டுதோறும் எடுக்கும் விழாவின்போது, வருவார் அனைவர்க்கும் பெருஞ்சோறு படைக்கும் பேருள்ளம் படைத்த வனும், உதியஞ்சேரல் எனும் பெயர் பெற்றவனுமாய ஒரு சேரமன்னனைப் பற்றி, அகநானூற்றுப் பாக்கள் இரண்டில் (அகம் : 65, 233) குறிப்பிட்டுள்ளார்.

"நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்

பாடிச்சென்ற பரிசிலர்”. "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியம் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை”.

இமயம் முதல், குமரிவரையான பெருநிலப்பரப்பில், இறந்த காலத்தில் நடந்துவிட்ட நிகழ்ச்சிகளையும், அறிந்துபாடும் இயல்புடைய மாமூலனர், உதியஞ்சேரல் அளிக்கும் பெருஞ்சோற்று விழாவைப், பாரதப் பெருஞ்சோற்று நிகழ்ச்சியோடு இணைத்துப் பாடவில்லை. அதுமட்டுமன்று; உதியஞ்சேரல் அளித்தது, தன்குலமுன்னேர் நினைவுவிழாக் குறித்தது; என, முற்றிலும் வேறுபட்ட காரணமும் காட்டியுள்ளார். ஆகவே, மாமூலனர் பாடிய உதியஞ்சேரல், பாரதப்போரில் சோறு அளித்த சேரனுக இருத்தல் இயலாது.

செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எ டு த் து க் கொண்டாடிய விழாவிற்கு வந்திருந்த, இலங்கையர்கோன் கயவாகு, கி. பி. 177 - 199 ல் அரியணையில் இருந்தவன் என்கிறது, இல்ங்கையின் பழம்பெரும் வரலாற்று நூல் மகா வம்சம். ஆகவே செங்குட்டுவனும், அக்காலத்தவன் ஆதல் வேண்டும். செங்குட்டுவன் காலம் அதுவாகவே, அவன் நந்தை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், அந்நெடுஞ்

7