பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரலாதனின் தந்தை, எனப் பதிற்றுபத்து இரண்டாம்பத்தின் பதிகம் கூறும் உதியஞ்சேரலாதனும், முறையே இரண்டாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும், முதலாம் நூற்றண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.

பாரதப்போரில் பெருஞ்சோறு அளித்த சேரனைப்பாடிய, முரஞ்சியூர் முடிநாகராயர், தலைச்சங்க காலத்தைச் சேர்ந்தவராவர்; ஆகவே அவரால் பாடப்பெற்ற, பாரதப்போரில் பெருஞ்சோறு அளித்த அச்சேரனும், அத் தலைச்சங்கத்தைச் சேர்ந்தவனே ஆதல் வேண்டும். அவ்வகையால், தலைச்சங்க காலத்தைச் சேர்ந்தவனுகிவிட்ட ஒருவன், கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவனை, இமயவரம்பன் நெடுஞ்சேர. லாதனின் தந்தையாதல், ஒருபோதும் இயலாது. ஆகவே, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தையாம் எனப், பதிற்றுப்பத்து இரண்டாம்பத்தின் பதிகம் கூறும் உதியஞ்சேரல், பாரதப்போரில் பெருஞ்சோறு அளித்த உதியஞ்சேரல் ஆவன் எனல், அறவே பொருந்தாது. ஆகவே, மாமூலனாராலும், சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்ற சேரர்குலப் புலவராலும் பாடப் பெற்றனும், குழுமூரில் தம் முன்னேர் நினைவாக, ஆண்டுதோறும் பெஞ்சோறு வழங்குவோனும் ஆகிய உதியஞ்சேரலாதனே, இமயவரம்பன் தந்தை ஆவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மனைவியர் இருவர்; ஒரு த் தி, சோழர்குடி வந்தவள். மணக்கிள்ளி என்பவன் மகளாய், நற்சோணை எனும் பெயருடையாள்; கண்ணகிக்குக் கற் கோயி ல் கட்டிய காவலனும் செங்குட்டுவனும், காவியக்கோயில் கட்டிய துறவியாம் இளங்கோவடிகளாரும். இவள் வயிற்றில் பிறந்த இமயவரம்பன், மக்களாவர். . .