பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வடவர் உட்கும் வான்தோய் வல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்

கடல் பிறக்கு ஒட்டிய செங்குட்டுவன்'

  • * * * * * * * * * * *

எனப் பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தின் பதிகமும்,

"குமரியொடு வடஇமயத்து ஒருமொழிவைத்து

உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள்

ஈன்ற மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக், கங்கைப் பேரியாற்றுக்

கரையோகிய செங்குட்டுவன்'

எனச் சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடையும்,

'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ அடிகள்’’

எனச் சிலப்பதிகாரப் பதிகமும், அ ப் ப தி க த் தி ன் உரை விளக்கமாக,

"குமரியொடு வடஇமயத்து ஒரு மொழிவைத்து உலகாண்ட சேரலாதற்குத், திகழொளி ஞாயிற்று ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன்தன் மகள், நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள்.... அ ந் த மி ல் இ ன் ப த் து அரசாள் உரிமை, இளையோற்கு உண்டென .... செங்குட்டுவன்தன் செல்லல்