பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கப், பகல்செல் வாயில் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச், சிந்தை செல்லாச் சேணெடும் தூரத்து அந்தமில்

இன்பத்து அரைசு ஆள் வேந்தாயினன்' என அடியார்க்கு

நல்லார் அளிக்கும் உரையும் காண்க,

இமயவரம்பன் மற்ருெரு மனைவி, வேளிர் குடியில் வந்தவள்; வேளாவிக்கோமான் பதுமன் என்பவன் மகள். இவ்விளையாள் வழியாகவும், இமயவரம்பனுக்கு, ஆண் மக்கள் பிறந்திருந்தனர்; களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்பது ஒருவன் பெயர். மற்ருெருவன் பெயர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பது.

“ஆராத்திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன்தேவி ஈன்ற மகன்.: களங்காய்க் கண்ணிநார்முடிச்சேரல்' "குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள் ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்'

என்பவரும், ப தி ற் று ப் ப த் து, நான்கு, ஆரும் பத்துப் பதிகங்களைக்காண்க.

இவ்வாறு, மங்கலமும் நன்கலமும் விளங்க, மனையற வாழ்வால் மாண்புற்ற இமயவரம்பன், ஈடும் எடுப்பும் இல்லா வீரகைவும் விளங்கினன். தமிழகம் முழுவதையும், தன் ஒரு குடைக்கீழ்க்கொண்டு ஆண்டான். தமிழகத்தை வெற்றி கொண்ட பின்னர், அவன் பெரும்படை, இமயப் பெருமலைகாறும் உள்ள. வடநாட்டு ஆரிய அரசர்கள் அனைவரையும் வென்றது. தன் வடநாட்டு வெற்றி, இத் தாரணி உள்ளள

1Q