பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் மறவாதிருக்க வேண்டும் என விரும்பி, பனிதவழும் இமயப்பெருமலையில், தன்குல இலாஞ்சனேயாகிய வில்லைப் பொறித்தான். அவ் வடநாட்டுப் போரில், வடவேந்தர்க்குத் துணையாய், தன்னோடு வந்து எதிர்த்த யவனர்களாம் வெளி நாட்டு வீரர்களைப், போர்க்கைதிகளாக்கி, அவர் கைகளைப் பின்புறமாகப் பிணித்து, அவர் தலையில் நெய்யை ஊற்றி இழிவு படுத்தினன்.

இவ்வாறு, வடபேரிமயம் முதல், தென்குமரிவரைப், பரவிய பெருநிலம் முழுவதையும் வெற்றிகொண்ட பின்னர், இமயவரம்பன் போர்க்குறி, கடம்பர் மீது சென்றது. கடலிடைத் தீவுகளை வாழிடமாகக்கொண்டு, தம் தீவுகளைக் கடந்து செல்லும் வாணிகப்பொருள் ஏற்றிய வங்கங்களை, வழிமடக்கிக் கொள்ளையிட்டுக் கொடுமை செய்து வந்தனர் அக்கடம்பர். அது பொருத இமயவரம்பன், தன் கடற்படைத் துணையால், அக்கடற்றிவினை அடைந்து, கடம்பரை வென்று அடக்கி, அவர் காவல் மரமாம் கடம்பமரத்தை அழித்துத் துண்டாக்கி, அம்மரத்துண்டால் மு. ர ச க் கி முழக்கி மகிழ்ந்தான்.

போர் கொண்டுபோன இடங்களில், தோற்ற அரசர் கள்பால் இருந்த, நவமணிகள் இழைத்துப்பண்ணிய, அருவிலை நன்கலன்கள், வயிரமாலைகள் ஆகியவற்றை வ ரி க் கொணர்ந்து, தன் அரசியல் பண்டாரத்தை நிரப்பி வைத்தான்; அம்மட்டோ; தன்னைப் பாடிப்பரவும் இரவலர் அனைவர்க்கும் வாரிக் கொடுத்தான். தன்னைப் பாடிய புலவர் பலராயினும், தன்னைப் பாராட்டப், பத்து பெரும்பாக்களைப் பாடியவரும், தன்னைத்தவிர்த்துப், பிறரைப்பாடி அறியாதவரும் ஆகிய, புலவர் குமட்டுர்க் கண்ணனர்க்குத், தனக்குரிய உம்பற் காட்டில் உள்ள, வளம்மிக்க ஐந்நூறு ஊர்களை வரிநீக்கி

li