பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்கியதோடு, தென்னட்டு வருவாயில் பாகம் பெறும் உரிமையை, முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் அளித்துப் பெருமை செய்துள்ளான்.

- இமயவரம்பன், தன் மக்கள் நால்வருள், செங்குட்டுவன்,

இளங்கோ என்ற, இருவரோடு ஒருநாள்.அரியணையில் இருந்த போது, அரசவை புகுந்த நிமித்திகன் ஒருவன், இளங்கோவின் உடலமைதியை ஊன்றி நோக்கிவிட்டு, அரசாள் உரிமை இளையோனுக்கே வாய்த்துளது என்ருன். அதுகேட்ட மூத்தோன் முகப்பொலிவில் தோன்றிய மாறுதலைக்கண்ட இளங்கோ, மூத்தோன் இருக்க, இளையோன் கோலேந்துவது, செங்கோல் முறைக்கு முற்றிலும் முரணும்; மேலும் இந் நிமித்திகன் உரையையும் பொய்யாக்குதல் வேண்டும் என்று துணிந்த இளங்கோ, உலகப்பற்றை அ ன் றே துறந்து, இளங்கோ அடிகள், எனும் பெரும்பெயரோடு அரண்மனை விட்டுக் குணவாயிற்கோட்டத்துள் குடிபுகுந்தார்.

இவ்வாறு அரசியல் துறையில் அயர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், சோணுட்டில் புதிய உணர்ச்சியோடு பெருகிவரும் ஒரு பேரரசிற்குத், தலைமை பூண்ட வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்ற, கட்டிளங்காளையோடு போரிட நேர்ந்தது. அப்போரில் தன்னைப்பகைத்த அச்சோழப் பெருவீரனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கொன்று வீழ்த்தி வெற்றி கொண்டான் என்ருலும், முதுமைத்தளர்ச்சியால், தானும் அக்களத்திலேயே உயிரிழந்து போனன்.

இமயவரம்பன், இவ்வாறு பீடும் பெருமையும் தோன்ற நாடாண்டிருந்தமையால் அவனைப் பெரும்புலவர்களாகிய பரணரும், மாமூலனரும் பாடிப்பாராட்டியுள்ளார்கள்.