பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கொள்ளை வல்சிக் கவர்கால் கூடளியர் கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரன் அறுப்ப’’

-பதிற்று : 19

காடுகொன்று நாடு ஆக்கிக், குளம்தொட்டு வளம்பெருக்க வேண்டியது நல்லரசின் கடமையாகும். பண்டு பாராண்ட சேரர் குலத்தவர், அது .ெ ச ய் து சிறப்புற்றவர் என்பதை அறிவிக்கும் பாடல்கள் பல, எடுத்துக்காட்டிற்கு ஒன்று.

பசும்புல் தலைகாட்டுவதல்லது, மக்கள் பசிபோக்கும் உணவுப்பொருள்விளையா வன்னிலம், ஒரு நாட்டின் வளத் திற்குத் துணைநிற்காது. அத்தகைய நிலமெல்லாம், வரப்புயர நீர் நிறைந்து, ஆரல் மீன் பிறழும் ந ஞ் செய் களாக , கலப்பையின் கொழுமுனை நுழையமாட்டாக் கல்லாங்குத்துக் களாக இருந்தவையெல்லாம், ஏர் ஓடவேண்டாதே கொல் லேறுகளின் கால்பட்ட அளவே, விதைப்பதற்குப் பக்குவப்பட்ட கொள்ளைப் புழுதியாகிவிடும் மென் னி ல மாக ம | றி மாண்புற்றுக்கிடந்தன. கால்நடைகள், பசி உறும்போ தெல்லாம், கருப்பங்கழனிகளின் வரப்புகளில் விளைந்துகிடக்கும் நெய்தல், அக்கால்நடைகளின் வயிற்றை நிறைத்து, வேறு ஒன்றை உண்ணவேண்டும் என்ற நினைவே தலைதுாக்காவாறு அக்கால்நடைகளைத் தடுத்துவிடுவதால், கழனிகளின் வான ளாவ வளர்ந்து நிற்கும் செங்கரும்பு, அக்கால்நடைகளால் உண்ணப்படுவது இல்லை. கரும்புவிளைகழனிகளின் வரப்பு களுக்குச் சென்று, வயிற்றை நிரப்பிக்கொள்ளும் நிலை, இளமை நலம்கெடாக் காளைகளுக்கு மட்டுமே. தலைவளைந்து ஆட்டம் கொடுத்துவிட்ட முதிய ஆவினத்திற்கு, அந்நிலை இல்லை. அவை ஊர்மன்றை அடைந்தாலே போதும். ஆங்கு இடையறவுபடாது நிகழும், துணங்கை ஆட்டத்தில் கலந்து கொள்ளும் மகளிர் அணிந்து மகிழும், மாலைகளிலிருந்து,

15