பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் ஆட ஆட உதிர்ந்து குவியும், ஆம்பல் இதழ்கள் அவற்றின் வயிற்றை நிரப்பிவிடும்.

இத்தகு வளநலத்தால் நிலம் நல்கும் பயன் அளவை, முற்றிக் கதிர்காய்ந்து கிடக்கும் நெல்லின்தாள்கள், அறுவடை செய்வாரின் கைஅரிவாளின் கூரை மழுங்கச் செய்து விடு. மளவு, வளமாக வளர்ந்து மடிந்து வீழ்ந்துகிடக்கும் என்றும், கரும்பைப்பிழியும் இயந்திரங்களின், பிழிந்த கருப்பஞ் சாற்றை வெளிப்படுத்தும் பகுதியாம் பத்தல் வளைந்துபோமளவு, சாறு கொட்டுகொட்டு எனக் கொட்டும் என்றும் கூறுவதன் மூலம் விளக்கியுள்ள நயம், வியந்து பாராட்டற்கு உரியது. .

'தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,

ஏறு பொருத செறு, உழாது வித்து நவம்,

கரும்பின் பாத்திப், பூத்த நெய்தல் இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவம், கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்

வளைதலை முதுஆ, ஆம்பல் ஆர்.நவும்”.

நெல்லின் செறுவின் நெய்தல் பூப்ப,

அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர் தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’’. -

- - - -பதிற்றுப்பத்து 13, 19

இயற்கை வளம்பாடும் அப் பாக்கள், அந்நிலத்து விலங்குகளின் வியத்தகு வாழ்க்கை வனப்புகளையும், வகைப் படுத்திக் கூறியுள்ளன. தம் உடலின் ஒரு மயிரை இழக்க நேரினும் உயிர்விட்டுப்போகும் இயல்புடைய கவரிமான் கூட்டம், தம் உடல் மயிர் சிக்குண்டு, உதிர்ந்துபோகச்

16