பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்துவிடும் முள்முருக்க மரங்கள் செறிந்த காட்டகத்தே வாழும் நிலையிலும், அது நேரவும் கூடும், அல்லது கொல்புலி போலும் கொடுவிலங்குகளால் தம்உயிர் இழப்புநேரவும் கூடும் என்றஅச்சம், அறவே இல்லாமல், இரவில் கண்ணயர்ந்து உறங்குவதும், அவ்வுறக்கத்தினிடையே காணும் கனவு நிலையிலும், அவ்வச்ச உணர்வு கொள்ளாது, மாருக, நரந்தம் புல் மேய்வது, தெளிந்த அருவிநீர் பருகுவது போலும் இனிய காட்சிகளையே காணும், இனிய வாழ்க்கை நலத்தை எடுத்துக் கூறியிருக்கும் நலம், நயத்திற்கு உரியது.

'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்’

- -பதிற்றுப்பத்து: 11

பிறந்தமயிர் உதிரப்பெருத இளமையும், இளமையால் தளர்ந்த நடையும் உடைய, அமையவேண்டிய உறுப்புநலனெல்லாம் அமையப்பெற்ற, சிறப்பு வாய்ந்த இளங்கன்று, மதநீர் நாற்றத்தால் வந்துமொய்த்து வருத்தும் வண்டுக் கூட்டத்தை ஒட்ட அறியாது வருந்த கன்று வருந்துவது கண்டு, அது ஈன்ற பிடியும் வருந்தும் நிலையில், கொத்துக் கொத்தாக மலர்ந்து மணம் கமழும் காட்டு மல்லிகையாம் பூங்கொம்மை முறித்துக்கொண்டு, வண்டுக்கூட்டத்தை ஒட்டிக், கன்றின் துயரையும், கன்றின்ற பிடியின்பெருந் துயரையும் ஒரு சேரப்போக்கித் துணைநிற்கும் களிற்றின் பெருமையினை, ஒருபாட்டின் சில வரிகளில் சிறக்கத் தீட்டி யிருப்பது, சிந்தைக்கு விருந்தளிப்பதாகும்.

'கமழும் குளவி

வாடாப் பைம்மயிர், இளைய, ஆடுநடை

-2- 17