பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைநகர்க்குள் புகுந்த புலவர் கண்களுக்கு, அப்பேரூர் வீதி களில் சென்றுகொண்டிருந்த வெற்றித்திருவுலா விருந்தளித்து வரவேற்றது.

கடம்பர் என்ற கடற்கொள்ளைக் கூட்டத்தினரை வென்று திரும்பும் இமயவரம்பனைத் தலைநகர்மக்கள் விழாக் கொண்டாடி வரவேற்றுக் கொண்டிருந்தனர். கடலிடைத்தீவுகளை வாழிடமாகக்கொண்டு வாணிகம் குறித்துவரும் வங்கங்களை வழிமடக்கிக் கொள்ளையடித்து உண்ணும் அக் கொடியோரால், தன் நாட்டுக் கடல்வாணிகம் வளமிழந்து போவது கண்டு கடுஞ்சினம் கொண்டான் இமயவரம்பன். இமயவரம்பன் இயல்பாகவே போர்வேட்கை மிகுந்தவன். தன் வேற்படைவீரரின் ஆண்மையை மதியாது, அவர் ஏந்தி நிற்கும் வேற்படைகளின் வன்மைகண்டு அஞ்சாது, தன்னைப் பகைப்பவர் உளராயின், அவர்கள் எத்துணைப் பெருவீரராயினும், தம்மொடு மாறுபடுவார் மார்பைப் புண்ணுக்குவதல்லது, தம்மார்பில் புண்பெருப் பேராண்மையுடையவரேயாயினும், அவர்கள் காத்துநிற்கும் அரண், எத்துணை உறுதிப்பாடுடைய தாயினும், அவ்வரணைச் சூழ்ந்திருக்கும் அகழி, நிறமற்ற நீரும், கருநீலம் பெறுமளவு ஆழம்மிக்கதேயாயினும், அவர்மீது அஞ்சாது போர்தொடுத்துச் சென்று, அன்னர் மார்புகள், தன்வேற்படையால் பிளப்புண்டு புண்ணுக, அப்புண்வழியே பெருக்கெடுத்து வெளிப்படும் குருதிவெள்ளம் பாய்வதால், அகழியின் ஆழ்நீர், நீலநிறம் மாறிச் செந்நிறம் பெறும்படி, அவ்வீரர்களைக்கொன்று, அவர்கள் காத்துநின்ற அரண அழித்து, வெற்றிகொள்ளும் போர்வேட்கையும், அதற்கேற்ற உரமும், ஆக்கமும் ஒருங்கே உடையவன் இமயவரம்பன். அத்தகையான் தன்நாட்டின் வளம்பெருக்கும் கடல்வாணிகத் திற்குக் கேடுவிளைவிக்கின்றனர் கடம்பர் என்பதைக் கேட்டும் வாளா இருப்பனே?

22