பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பர்செயல் கேட்ட அக்கணமே, சேரநாட்டுக் கடற். படை போருக்குப் புறப்பட்டுவிட்டது. கடம்பர்வாழ் தீவுகளை வளைத்துக்கொண்டது. சேரநாட்டு வாள்வீரர், கலம் புகுந்து கடம்பர்களைத்தாக்கினர். சேரர் படையோடு செருச்செய்தல் தம்மால் இயலாது என்பதைக் கண்டுகொண்ட கடம்பர், தம் குலமரமாம் கடம்பமரத்தைக் காத்துக்கொள்வதையாவது மேற்கொள்ளலாம் என்ற கருத்துடையராய் ஒன்று திரண்டு, அம்மரத்தைக் காக்கத்தலைப்பட்டனர். ஆனால், சேரர் நாட்டு வீரர்கள், கடம்பர்களுக்கு, அச்சிறுவாய்புதானும் அளிக்க விரும்பினரல்லர். காவல் மரமாம் கடம்பை அழித்தாலல்லது. கடம்பர்களின் செருக்கு அடங்காது என்பதறிந்து, அதைக் காத்துநின்ற கடம்பர்களைக்கொன்று, அக்கடம்பை அடியோடு வெட்டி வீழ்த்தினர்கள். வீ ழ் ந் த கடம்பைக் குடைந்து முரசாக்கி முழக்கி, அ ம் மு ழ க் .ெ கா லி கேட்டுக் களி

கூாநதாாகள.

புலவர் புகுந்த காலை, அவ்வெற்றி விழாவே சேரர் தலைநகரில் சிறப்புறக்கொண்டாடப்பெற்றது. களம்பலகண்டு, கோட்டைகள் பலவற்றைக் குத்திப்பாழாக்கிய, பெருமிதம்மிக்க, வெண்கோடுடைமையால், வீறுபெற்ற வேழத்தின் பிடரிமீது, பெருமிதம் தோன்ற வீற்றிருந்தான் இமயவரம்பன். அவன் மார்பிற்கிடந்து புரளும் வாகைமாலை, பொன்னரிமாலை அணிந்த அவ்வேழந்தின் ஒடையளவும் தாழ்ந்து தவழ்ந்தது. போர் என்ருல் பூரிக்கும்நாற்படை முன்னேசெல்ல, இமயவரம்பன் வீற்றிருக்கும் வேழம், பெருமித நடைபோட்டு அசைந்து செல்லும்:அழகிய காட்சியைக், கண்குளிரக்கண்டு, களித்த நாட்டவரெல்லாம், அவன் வெற்றிச் சிறப்பினை நாவாரப் புகழ்ந்து பாராட்டினர். வெற்றி வாழ்த்தொலி வானதிர வரும், அத்திருவுலாக் காட்சியைக் கண்டுகளித்தார் புலவர்.

23