பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலிடையே புகுந்து கடம்பமரத்தைவெட்டி வெற்றி பெற்று, களிற்றின் மீது அமர்ந்து, இமயவரம்பன் உலா வரும் அக்காட்சியைக் காணும் புலவர் அகத்தே, பிறஉயிர். களுக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அவனர்க்கு அரசனுய், அவர் அழிவுத் தொழில்களுக்கு ஆக்கம் அளித்துவந்த சூரன்மீது போர் தொடுக்க, அவன், அஞ்சி ஒடிக் கடலிடைத்தீவு ஒன்றில் மாமரமாக உருவம் திரிந்து ஒளிந்துகொண்டாகை, காற்று கடும்புயலென வீசுவதால், மலைபோல் உயர்ந்தெழும் அலைகள், வெண்சிறு துளி. களாக உடைந்து ஓவென ஓலமிடும் பரந்த கடலைக் கடந்து சென்று, அம்மரத்தை இருகூருகப் பிளந்து அழித்து, அவ்வவுண்ர்தலைவன் உயிர்குடித்து, அச்சிறப்பால் பிணிமுகம் எனும் பெயர்பூண்ட களிற்றின்மீது அமர்ந்து உலாவரும் முருகன் திருவுலாக்காட்சி நிழலாடிற்றுபோலும்!

அவ்வளவே! இமயவரம்பனை, உமையவள் தன் திருமகளுகவே கருதிவிட்டார் புலவர். அவர் காணும், அகப்புறக் காட்சிகளை, அழகிய சொல்லோவியமாக்கிவிட்டது அவர்வாய்.

அச்சொல்லோவியத்தைச் சுவைத்து மகிழ்ந்த யாரோ ஒரு பெரியார், அச் செய்யுளில் இடம்பெறும் 'புண்உமிழ் குருதி' என்ற தொடரில், முதற்கண் நிற்கும் புண்” என்ற சொல், பகைவர் படைக்கலம் பாயாப் பெருமை வாய்ந்த மார்பைப், பிளந்து பண்ணிய புண், என முன்வரும் தொடரால் பெருமைபெற, 'குருதி' என்ற சொல், அகழிநீரின் இயல்பான, நீலநிறத்தையும் அழித்துச் செந்நிறமாக்குமளவு பெருக்கெடுத்துப்பாயும் குருதி எனப், பின்வரும் தொடரால் பெருமைபெற, அமைந்திருக்கும் அழகைக்கண்டு, அச்சொல்லோவியத்திற்குப் புண் உமிழ் குருதி எ ன் ப .ே த

பெயராக்கிப் பெருமை செய்துள்ளார்.

24