பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,

10

15

20

25

வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல் ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி, அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல்வேள், களிறு ஊர்ந்தாங்கு, செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின் மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மலைக் கலவை போல அரண்கொன்று முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை; பலர் மொசிந்து ஒம்பிய அலர்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்குபனை செய்த வெல்போர் நார்அரிநறவின், ஆர மார்பின், போர் அடுதானைச் சேரலாத! மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பின் பழிதீர் யானைப் பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே; கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம், தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே,

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்துாக்கு பெயர் : புண்ணுமிழ் குருதி

25