பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்தபக்கடந்து (21-25) அரண்கோன்று, ஊக்கல், கடம்பின் முதல் துமிய ஏஎய், பனைசெய்த சேரலாத (7-16) வேள் களிறு ஊர்ந்தாங்கு, (1.5) யானை எ ரு த் த ே10 ல் பொலிந்த நின்செல்வம், இனிது கண்டிகும் (17-20) என மாற்றிப் பொருள் கொள்க. - -

கவிர்ததை=சிலம்பில் முருக்கமரங்கள் மலிந்த மலையில், துஞ்சும் கவரி = உறங்கும் கவரிமான்கள்; பரந்து இலங்கு அருவியொடு-பகற்போதில் தாம் பருகிய பரந்து விளங்கும் அருவி நீரோடு. நரந்தம் கன வும் மேய்ந்த நரந்தம் புல்லையும் கனவிற்கண்டு மகிழ்தற்கு இடமாய், ஆரியர் துவன்றிய = ஆரியர்கள் நிறைந்த, பேரிசை இமயம் = பெரும்புகழ் வாய்ந்த இமயம்; தென்னம்.குமரி = தெற்கின்கண் உள்ளதான குமரி; ஆயிடை = ஆகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாட்டில் உள்ள, மன் - மன்னர்களுள்; மீக்கூறுநர்= தம்மைத்தாமே உயர்வாகக்கருதிச் செருக்குற் றவர்களின்; மறம்தபக் கடந்து = ஆற்றல் கெட்டழிய வென்று, செவ்வாய் எஃகம் = கூரிய வாயினே உடைய வேற்படை விலங்குநர் அறுப்பு=எதிர்த்து நிற்கும். பகைவரை அழிக்க; அருநிறம்= பிறரால் தீண்டற்கரிய அப்பகைவர் மார்பு: திறந்த = உன் வேற்படை ப ய் ந் து பிளந்ததல்ை உண்டான; புண்உமிழ்.குருதி = புண்களிலிருந்து ஒழுகும் குருதிவெள்ளம் பாய்ந்து கலப்பதால்: இருங்கழி - பெரிய அகழியின்; மணி நிறநீர்=ஆழம் மிகுதியால் நிலமணியின் நிறம் காட்டும் நீர்; திறம்பெயர்ந்து = தன் நீலநிறம்கெட்டு; மலைக் கலவை. போல = குங்குமக்குழம்புபோல் ஆகுமாறு: அரண்கொன்று =அப்பகைவர்களின் கோட்டைகளை அழித்து; முரண்மிகு சிறப்பின்=ஆற்றல்மிகு சிறப்பினுல்; உயர்ந்த ஊக்கலை = சிறந்த மனவெழுச்சி உடையையாகி; பலர்மெஸ்சிது ஒம்பிய = கடம்பர் பலர் கூடியிருந்து காத்திருந்த அலர்பூங்

26