பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பின்=மலர்ந்த மலரால் நிறைந்த கடம்ப மரத்தின்; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்=காவல் அமைந்த அடிமரத்தை அடியோடு அழிக்குமாறு படைகளை ஏவி, வென்று - வெற்றி கொண்டு; எறிமுழங்கு பணசெய்த=அம்மரத்தைக்கொண்டு, அடித்து ஒலி எழுப்பும் போர் முரசினைப் பண்ணிக்கொண்ட, வெல்போர் - வெல்லும்போரினையும்; நார் அரி நறவின் = நாரால் வடித்தெடுக்கப்பெற்ற நறிய மதுவினையும்; ஆர மார்பின் = மாலையணிந்த மார்பினையும்; போர் அடுதான= அஞ்சாது போர்புரியும் ஆற்றல்மிக்க படையினையும் உடைய, சேரலாத = சேரலாதனே வரைமருள்புணரி = மலைபோல் உயர்ந்த அலைகள்; வான்பிசிர் உடைய = வெண்சிறு துளிகளாக உடைந்துவிடுமாறு; வளிபாய்ந்து அட்ட=காற்றுப் புகுந்து அலைத்த, துளங்கு இரும் கமம் சூல்=ஓவெனும் ஒலியெழுப்பியவாறே அலையும், க ர் மே க க் கூட்டப்படிந்து பருகுவதால் குறைதலோ, ஆறுகள் பாய்வதாலும் பெருமழை பெய்வதாலும் நிறைதலோ இல்லாமல். என்றும் ஒரு படித்தாக நிறைந்தது கிடக்கும், ஓவெனும் ஒலியெழுப்பியவாறே அலையும் நிறைந்த நீரையும்; ஒளி இரும்பரப்பின்= அளந்து காணலாகா மிகப்பெரிய இடப்பரப்பினையும் Ê- 6ð) – tIÍ : மாக்கடல் முன்னி=கரியநிறம்,வாய்ந்த கடலிடையே சென்று. அணங்குடை அவுணர்= பிறர்க்குத் துன்பம் தருவதையே தொழிலாகக்கொண்ட அவுணர்க்கு; ஏமம் புணர்க்கும்; காவலாய் நின்று துணைபுரியும்; சூருடை முழுமுதல் தடிந்த= சூரவன்மாவினுடைய மறுவுருவாய் நின்ற மாமரத்தினை வேரோடு வெட்டி அ ழி த் த; பேரிசை=பெரியபுகழும்; கடுஞ்சின = பெருஞ்சினமும்; விறல்வேள் = பேராற்றலும் வாய்ந்த செவ்வேல் முருகன், களிறு ஊர்ந்தாங்கு = பிணிமுகம் எனும் பெயர்பூண்ட யானைமேல் அமர்ந்து உலா. வருதல் போல்; மார்புமலி பைந்தார் = மார்பில் கிடந்து அசையும் புதிய மலர்களால் தொடுக்கப்பெற்ற வெற்றிமாலை.

27