பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற நிலையுறும் வகையில், அழிக்கப்பட்டது என்பதை உணர்த்தி, நெடுஞ்சேரலாதனின் அழிக்கும் ஆற்றலின் திறத்தைப் பாராட்ட விரும்பிய புலவர் "அரண் கொண்டு’ என்ருே, 'அரண் அழித்து’ என்ருே கூறலாமாயினும், அவ்வாறு கூருமல், “அரண்கொன்று’ எனக் கொன்று” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து ஆண்டிருக்கும் நயம். அறிவுக்கு ஒரு நல்ல விருந்து.

நெடுஞ்சேரலாதன் கடம்பு எறிந்து முரசுகொண்ட வெற்றிச்சிறப்பினை இவ்வாசிரியர், துளங்குபிகிர் உடைய மாக்கடல் நீக்கிக் கடம்பறுத்து இயற்றிய வியன்பனை '(பதிற்று: 17)', 'இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன்' (பதிற்று :20) என, மேலும் பாராட்டியிருப்பதோடு, 'சால்பெரும் தானைச் சேரலாதன் மாக்கடல் ஒட்டிக் கடம்பறுத்து’ இயற்றிய பண்.அமை முரசு, 'வலம் படு முரசின் சேரலாதன், முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து' (அகம்: 347-127) என மாமூலனரும் பாராட்டியுள்ளார்.

மயிர் இழக்கநேரின், தாம் உயிர் வாழோம் என்பதைத் தாம் வாழும் காட்டில் உணர்ந்திருந்தும் அடர்ந்து வளர்ந்திருக்கும் முருக்க மரத்து முட்கள் தம் உடல் மயிர்க்கு ஊறு செய்யா என உணர்ந்திருந்தமையாலும், தாம் வாழும் அக் காடு, தம் பகை விலங்காம் கொல்புலிபோலும் கொடுவிலங்கு களுக்கும் வாழ்வளிக்கும் இடமாயினும், அவையும், தமக்கு ஊறுசெய்யா என உறுதியாக உணர்ந்திருந்தமையாலும், சிறிதே கண்ணயரவும் அஞ்சுவதோ, ஒரோவழிக் கண்ணியர்ந். தாலும், அக்கண்ணயர்வில், முருக்கம் முள்ளில் சிக்குண்டு மயிர் இழக்க நேரிடுவது, புலிக்கூட்டம் தம்மீது பாய்வது போலும் கனவுகளே வரக்கண்டு வெருவி விழித்துக் கொள்வதோ

29