பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாமல், தம்மை மறந்து உறங்குவதும், அவ்வுறக்கத்தினிடையே மலைச்சாரலில் மண்டிக்கிடக்கும் நரந்தம்புல்லை வயிருர மே ய் ந் து, ஆங்குப் பளிங்கெனப்பாயும் நறுநீர் உண்பது போலும் இன்பக் கனவுகளே கண்டு இன்புறுவதும் செய்யும் கவரிமானின் மாண்பினைக் கூறுமுகத்தான், தன். னிடத்து மாவும், மரமும் மறந்தும் பிறஉயிர்க்கு ஊறுசெய்யா, இமயப்பொருப்பின் இனிய இயல்பை, எடுத்து விளக்கியிருக்கும் நயம் வியந்து இன்புறற்கு உரியது

நெடுஞ்சேரலாதன், இமயம் வரை சென்று, ஆங்கு வாழ் ஆரிய மன்னரை வென்று மங்காப்புகழ் கொண்ட செய்தியை,

'ஆரியர் அலறத்தாக்கிப், பேரிசைத்

தொன்று முதிர்வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி' s

எனப் பரணரும்,

-૭ક 396

'வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்த-இமயத்து முன்னேர் மருள வணங்குவில் பொறித்து’’ - . . -அகம் : 127 என மாமூலனரும் பாராட்டியுள்ளனர். .

நரந்தம்புல் மேய்ந்து, அருவியில் நறுநீர் பருகிய கவரிமான் கவலையற்றுக் கண்ணுறங்கும் இமயமலைப்

பெருமையை

'நாந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனைப்பருகி, அயல

30