பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மறம் வீங்கு பல்புகழ்

இமயவரம்பன், கடம்பரைவென்று அவர் காவல்மரமாம் கடம்பை வெட்டி வீழ்த்திய வெற்றிச்செயல், ஏனைய வேந்தர்க் கெல்லாம் பேரச்சம் தந்துவிட்டது. தம் வாள் வன்மையால் பிறநாட்டு வாள் வீரர்களையெல்லாம் வீழ்த்திவென்று, அந்நாடுகளைத் தந்நாடுகளாக ஆக்கிக்கொள்ளும் அத்துணை ஆற்றல் வாய்ந்திருந்தும், அவர்கள், இமயவரம்பன் கடம். பெறிந்த ஒரு செயல்கண்டே நடுக்கம்கொண்டனர். தாம்மிகப் பலராக இருந்தும், தனியொருவனம் அவன்முன் அஞ்சி, தத்தம் அரணகத்தே அடங்கியிருந்தார்கள். மான், யானை போலும் வி ல் ங் கு க ள் கூட்டங் கூட்டமாகவாழும் இயல்புடையவேனும், ஆண் சிங்கம் வாழும் மலைச்சாரலை அணுகவும் அஞ்சி, தத்தம் வாழிடங்களில் அடங்கி ஒடுங்கிக்கிடக்கும் நிலையிலும், அச்சிங்க ஏற்ருல், தமக்கு எந்நேரத்தில், எத்தகைய கேடுவந்து வாய்க்குமோ எனும் நடுங்கும் உள்ளத்தோடு உறக்கம் ஒ ழி ந் து கிடப்பதுபோல், சேரநாட்டை அடுத்துள்ள அரசர் அத்தனைபேரும், முரசொலிக்கும் பெருமைவாய்ந்த, பெரிய பெரிய கோட்டைகளைத் (அகத்தே வாழ்ந்திருந்தும், சேரலாதன் பெரும்படை தம் கோட்டை) தகர்த்துவிடுமோ? என்ற எண்ணங்கள் அலைக்கழிக்க, உறக்கம் அறியாது, அஞ்சி விதிர்விதிர்த்துக் கிடந்தார்கள். இவ்வாறு தன்னை நினைக்கும் நெஞ்சமும் அஞ்சுமளவு பேராற்றல் பெற்றிருந்தான் இமயவரம்பன் என்ற செய்திகேட்டு, இனித்தது புலவர் உள்ளம்.

புகழ்வரும் வழிகள்பலவே எனினும், வீரத்தால் வரும் புகழே விழுமிய பு க ழாம் எனக்கொண்டு, அப்புகழைப்

32