பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமளவில் பெற்றுள்ளான் இமயவரம்பன் எனக்கேட்ட புலவர் உள்ளத்தில், அப்புகழ்படைத்த பெரியவனைப் பார்க்க வேண்டும், அத்தகு வெற்றிப் புகழ்உடையான்பால், இயல்பாகவேவந்து குவிந்து கிடக்கும் பெருஞ்செல்வப் பேற்றினையும் பார்க்கவேண்டும் என்ற வேட்கை பெருகிவளர்ந்தது.

உடனே, இமயவரம்பனைக் காணச் சேரநாடு நோக்கிப் புறப்பட்டார் புலவர். புலவர் தனியொருவர் அல்லர். ஆல்போல்தழைத்த ஒருபெருஞ்சுற்றம், அவரைச் சுற்றியிருந்தது. புலவர்பால் தெள்ளிய நல்லறிவு வாய்த்திருந்ததுபோல், வற்ருப்பெருந்திரு வாய்த்திருக்கவில்லை. அதல்ை, நெடுநாட்களாகவே பசிப்பகைவல்ை பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருந்த அவர்களும், புலவரைத் தொடர்ந்தார்கள்.

புலவரும், அவருடைய பெருஞ்சுற்றமும் மலையிடை வழி களைக் கடந்து செல்வாராயினர். பசிமிகுதியால் இயல்பாகவே உடல் தளர்ந்திருக்கும் அவர்களைக்,காட்டுக்கொடுவழி, மேலும் துன்புறுத்தியிருக்கும். ஆளுல் அக்காட்டு வழியின் இயற்கைக் காட்சிகள், அவர்களைப் பற்றியிருந்த உடல் தளர்ச்சியைப் போக்கியதோடு, உள்ளத்தில் உயர்ந்த நம்பிக்கை எழவும் துணைபுரிந்தன. . х

காட்டுவழியெங்கும் கன்றின்ற பிடியானைகளே காட்சி அளித்தன. கன்றுகள் ஆளுகப் பிறந்திருந்தமையால், அவற்றிள்பால் பெருமிதவுணர்வு இயல்பாகவே அமைத்து கிடந்தது. பிறந்த மயிரும் உதிராத, அத்துணை இளமையவாய், அக்கன்றுகள் அசைந்து அசைந்து செல்லும் நடையழகு கண்டு, களித்தவாறே அவற்றின் பின்செல்லும் பிடிகள், கன்றுகளின் மத்தகத்திலிருந்து ஒழுகும், மதநீரை உண்னும் விருப்பத்தால் வண்டுக்கூட்டம் வந்து மொய்க்க, தம்

-3- 33