பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல்வன, அணுகவும் நெஞ்சு நடுங்கி ஒடுங்கிக் கிடப்பது போல, காவல்மிக்க கோட்டைகளுக்கு உரியராக இருந்தும், சேரலாதன் ஆற்றலை நினைந்து, கண்ணுறக்கம் ஒழிந்து கலங்கிக் கிடக்கும் காட்சி, படைக்கலன்களின் முனைமுரிந்து போமாறு பகைவரை அழித்து வெற்றிகொள்வது, உண்மை வீரனுக்கு அழகாது. அரவு கு டி வ ழு ம் புற்றையும், கொல்லேறு உலாவும் ஊர் மன்றையும் அணுகவும் அஞ்சி அகன்றுபோவது போல், இவ்வரணகத்தே உள்ளான், ஒரு வீரன் எ ன க் கேட்டகணமே, பகையரசரெல்லாம் அஞ்சி அகன்று ஒட, வாழும் வாழ்வே, உண்மை வீரத்துக்கு அழகாம் என்ற கருத்தமைந்த, மதுரை இளங்கண்ணிக் கெளசிகளுர் பாட்டை நினைவூட்டிவிடுவது உணர்க.

இரும்பு சிதைய நூறி, ஒன்னர் இருஞ்சமம் கடத்தல் ஏைேர்க்கும் எளிவதே; நல் அரா உறையும் புற்றம் போலவும், கொல் ஏறு திரிதரும் மன்றம் போலவும், மாற்றரும் துப்பின் மாற்ருேர், பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடுவேள் என் ஐ கண்ணதுவே

-புறம் : 309

40