பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பூத்த நெய்தல்

நிலம், நாடாகிவிடுவதால் நலம்பெற்று விடுவதுமில்லை; காடாகவேயிருப்பதால் கேடுற்றுப்போவதும் இல்லை. நிலம் நல்லதாதலும் தீதாதலும், அது நாடாகவும், காடாகவும் இருப்பதால் மட்டும் ஆகிவிடுவதில்லை. நிலத்தில் தொழில் புரியும் ஆடவரின் நன்மை தீமைக்கு ஏற்பவே, நிலத்தின் நன்மையும் தீமையும் அமையும். ஆடவர் நல்லவராயின், நிலமும் நல்லதாம். ஆடவர் தீயவராயின், நிலமும் தீதாம். இவ்வாறு கூறியுள்ளார் ஒரு பெரியவர்.

இவ்வுண்மை உரைக்குச் சான்றுபகர்ந்து நிற்கும் நிலை, இமயவரம்பன் இருந்தாளும் நாட்டிற்கும், அவன் பகைபெற்று அழிவுற்ற நாட்டிற்கும், இருப்பதைக் கண்டார் புலவர் குமட்டுர்க் கண்ணனுர்.

இமயவரம்பன் பகைபெருதபோது, அவன் பகைவர் நாடு. பெற்றிருந்த பெருவளப்பெருமையைப், பார்த்திருந்தார் புலவர். ஆனிரைகள் புல்மேயுமளவு, புல்லும்பூண்டும் முளைத்து மேய்புலமாகவே விளங்கிய, மேட்டு நிலங்களெல்லாம், ஆரல்மீன்பிறழுமளவு நீர்வளம்மிக்க நன்செய்களாகமாறியிருந் தன எருதுகள் ஒன்ருேடொன்று போரிடுவதினலேயே, வயல் கள் சேருகிவிடுவதால், ஏ ர் கொண்டு உழவேண்டாமலே விதைக்குமளவு, பண்பட்டுத் திகழ்ந்தன. கரும்புவிளை கழனி களில் எப்போதும் நீர் நிறைந்திருந்தமையால், அக்கரும்புப் பாத்திகளில் வளர்ந்து மலர்ந்திருக்கும் நெய்தல், எருமை களுக்குத்தாமே சிறந்த உணவாகிவிடுவதால், கரும்பைத் தின்னவேண்டும் என்ற கருத்து, அவற்றின் உள்ளத்தில்

41