பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்புவிளையும் கழனிகளெல்லாம், கரம்புகளாய்க் காட்சி அளித்தன. விடைத்தேரை மரங்களும், உடைமரங்களுமே எங்கும் வளர்ந்திருந்தன. மகளிர் துணங்கையாடி மகிழ்ந்த இடங்களிலெல்லாம், பேயும் பிசாசும் திரியலாயின. மன்றங்களில் மக்கள் அமர, ஆங்கு அமைத்திருந்த மேடைகள், போர்க்களப் புழுதிபடிந்து மாசடைந்துபோயின. மக்கள் ஆரவாரம் அற்ற அவ்விடங்களை, அணுகவும் அஞ்சவேண்டியதாயிற்று. ஒருவாறு உள்ளுரம் மிகுந்து, உட்புகுவார் உளரேல், சென்றவர், ஆ ற் ற ல் இ ழ ந் து அஞ்சி அலறிப்புடைத்து வருவோராயினர். இவ்வாறு பாழ்பட்டுப் போயின. பகைவர்தம் நாடும் நகரமும். -

நாடுகள் நல்லனவாயிருந்தும், நாடாள்வோர்பால் நன்மையிலாக்குறையால், கேடுற்றுப்போகும் காட்சியை, இமயவரம்பனின் பகைபெற்றநாட்டில் கண்ட புலவர், கேடுற்ற நிலம், தன்னை ஆள்வோர் நன்மையால், பீடுற்றநிலமாம் பெருமையை, இமயவரம்பன் நாட்டில் கண்டார். -

இமயவரம்பன் ஆட்சிக்குட்பட்ட நாடு, அவன் ஆளத் தொடங்கும் முன், காடாகவே காட்சி அளித்தது. அவன் ஆளத்தொடங்கிள்ை. அன்றே, அது நன்குடாகிவிட்டது. கொடுவிலங்கு வாழ்ந்துவந்த பெருங்காடுகள், அறம் அறிந்து உரைக்கும் ஆன்ருேர்களின் வாழிடமாக மாறிவிட்டன. வரகும், சோளமும் மட்டுமே விளையும் கொல்லைமேடுகளெல்லாம், உயர்ந்த அணிபல அணிந்த மகளிரும், அவர்தம் கணவராம் உழவரும், மகிழ்ந்து தொழில்புரியும் விளைநிலங்களாகிவிட்டன. ஆறலைகள்வர் அலைந்துதிரிந்த அந்நாட்டுப் பெருவழிகள், ஆன்ருேர்களும், அணிபலபூண்ட ஆரணங்குகளும் அச்சம் ஒழிந்து, தனித்தே கடக்கும் அருமையுடையவாயின. சேரலாதன் செங்கோற்சிறப்பால், மழை

43