பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயொடு பசி இகந்து ஒரீஇப் பூத்தன்று பெரும! நீ காத்த நாடே’.

பெரும! (28) நாடு (1-10) கூற்றடு நின்ற யாக்கைபோல (11) கவினழிய, நாமம் தோற்றி (10) நீ சிவந்திறுத்த பாக்கம் (12) கழனி புல்லென, உடைபோகி பேய் மகள் இயங்க, மன்றத்து அழிய, தபுத்து பாழாயின. (13-19) நீ காத்தநாடு (28) பூத்தன்று (20-28) என முடிக்க,

பெரு=பெருமானே! தொறுத்தவயல் = பசுக்கூட்டம் புல்மேயும் கொல்லமேடுகளெல்லாம்; ஆரல் பிறழ்நவும்= ஆரல்மீன் உலாவவல்ல நீர்நிறை நன்செய்களாயினவும்; ஏறு பொருதசெறு=எருதுகள் போரிட்டதால் சேறுபட்ட வயல்கள்; உழாதுவித்துநவம்=உழவேண்டாமலே விதைக்கும் வளம் உடையவாயினவும்; கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்= கரும்புப் பாத்திகளில் முளைத்து மலர்ந்திருக்கும் நெய்தல், இருங்கண் எருமையின் நிறை தடுக்குநவம்=பெரிய கண்களை யுடைய எருமைக் கூட்டத்தைப் பிற புலம் நாடிச் செல்லாவாறு தடுக்கும் வளம் உடையவாயினவும். கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்=ஆரவாரம் எழ, மகளிர் துளங்கைக். கூத்தாடும் இடங்கள். வளைதளமூதா=வளைந்த தலையுடையவாகி விட்ட முதிய பசுக்கள். ஆம்பல் ஆர்.நவும் = மகளிர் உதிர்த்த ஆம்பல் இலைகளையும் மலர்களையும் மேயும் இடங்களாயினவும். ஒலிதெங்கின்=தழைத்து வளர்ந்த தென்னைகளையும். இமிழ்மருதின்=பறவைகள் ஒலிக்கும் மருதமரங்களையும். புனல்வாயின் பூம்பொய்கை = புனல்போக்கும் கால்வாய்களையும், தாமரைப் பொய்கைகளையும் உடைய, பாடல்சான்ற = புலவர் படா ர ட் ட ப் பெற் ற, பயங்கெழுவைப்பின்=பொருள்வளம் பொருந்திய ஊர்களையுடையனவுமாகிய, நாடு=உன் பகைவர்நாடு. கூற்று அடுஉ

46