பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்ற யாக்கைபோல கூற்றுவளுல் அலேக்கப்பட்ட உடல் உருக்குலேந்து போதல்போல். கவின் அழிய = அழகிழந்து போகுமாறு. நாமம் தோற்றி=அந்நாட்டு மக்கள் உள்ளத்தில் முதற்கண் படையெடுப்பு அச்சத்தை உண்டாக்கிவிட்டு. நீ சிவந்து இறுத்த=நீ சினம் மிகுந்து, நாற்படையோடு சென்று தங்கிவிட்டமையால், நீர் அழி பாக்கம்=தன் இயல்பு கெட்டுப் போன பேரூர்கள். விரிபூங் கரும்பின் கழினி புல்லென= மலர்ந்த வெண்பூக்களையுடைய கரும்பு விளையும் கழனிகள், விளைவிழந்து பொலிவிழந்துபோக. திரிகாய் விடத்தரொடு= முறுக்குண்ட காய்களையுடையவாகிய விடத்தேரை மரங். களோடு; கார் உடைபோகி=கரிய உடை மரங்களும் வளர்ந்து ஓங்கவும்; கவைத்தலைப் பேய்மகள்=இரு பிளவாய்ப் பிரிந்து முறுக்குண்ட மயிர்களையுடைய பேய்கள்; கழுது ஊர்ந்து இயங்க = கழுதைமீது ஏறித்திரிய. ஊரிய நெருஞ்சி= பரந்த நெஞ்சிமுட்செடிகளையுடைய நீறுஆடு பறந்தலை தாது எரு மறுத்த = செந்துள் பறக்கும் போர்க்களத்திலிருந்து எழுந்த புழுதியாகிய குப்பைகளால் மாசுபடிந்த. கலி அழிமன்றத்து=மக்கள் வழங்கும் ஆரவாரம் அடங்கிய மன்றங்களில். ஊக்குநர் உள்ளம் அழிய=செல்லுமாறு ஊக்குவோரின் உள்உரம் அழியவும். உள்ளுநர் மிடல் தடித்து = செல்ல நினைவோரின் ஆ ற் ற லே அழித்து. பனிக்கும் பாழாயின அச்சுறுத்துமளவு பாழிடங்களாயின. நீ காத்த நாடு = நீ இருந்து ஆளும் உன் நாடு, காடே கடவுள்மேன = காடுகள் அறவோர் வாழும் இடங்களாயின. புறவே = கொல்லை. மேடுகள். ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன=ஒளிவீசும் அணிகள்பூண்ட மகளிரும், மைந்தரும் தொழில்புரியும் விளைபுலன்களாயின. ஆறே அவ்வனைத்து பெருவழிகளும் அந்நல்லியல்பே உடையவாயின. அன்றியும் = மேலும். ஞாலத்து = உலகில். கூலம் பகர்நர் குடிபுறந்தராஅ=நெல் முதலாம் கூலப்பொருள்களைவிற்கும் வணிகர்களைப் பேணியும்,

47