பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடி புறந்தருநர் பாரம் ஒம்பி = உணவாக்கி உயிர்களை ஒம்பும் உழவர்களின் பெருங்குடியைப் பேணியும். அழல் சென்ற மருங்கில் = தீய கோளாகிய செவ்வாய் சென்ற இடத்திற்கே, வெள்ளிஓடாது=நல்ல கோளாகிய வெள்ளியும் சென்றுவிடாது நல்லிடத்தே நிற்பதால், மழைவேண்டு புலத்து த மழை வேண்டிநிற்கும் நிலங்களில். மாரி நிற்ப = மழைபெய்ய. நோயொடு பசி இகந்து ஒரீஇ = நோயையும் பசியையும் இல்லையாக ஒட்டி, பூத்தன்று=பொலிவு பெற்றது.

அரசன் செங்கோல் நெறிமறந்து, கொடுங்கோல் நெறி சென்று விடுவனுயின், வெள்ளிமுதலாம் கோள்களும், தம்நிலை மாறிவிடும். அவை நிலைமாறிவிடின், நாட்டில் மழைமாறிவிடும். மழை மாறிவிட்டால் மண்ணுலகில் உயிர்வாழ்க்கை நடைபெருது. 'கோன் நிலை திரிந்திடின், கோள் நிலை திரியும்; கோள் நிலைதிரிந்திடின் மாரி வறங்கூரும்; மாரி வறங்கூரின், மன் உயிர் இல்லை’ (மணிமேகலை 7: 8-10) எனச் சாத்தருைம், நல்லாட்சிக்குரிய இயல்பு வழிநின்று அரசு நடாத்துவோன் நாட்டில், ம ைழ யு ம், அது துணையால் உளவாம் விளையுளும் சிறந்த வளங்கொழிக்கும். 'இயல்புளிக்கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு.” (குறள் : 545) எ ன் ற உடன்பாட்டுநிலை, மன்னவன் முறைகெட அரசு நடத்துவனயின், அவன் நாட்டில் மாரி யும் கெட்டுப்போகும் : "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்’ (குறள் : 559) என்ற எதிர்மறை நிலைகளில், வள்ளுவரும், கூறி ஒரு நாடு மழைவளம் குன்ருது உளது என்ருல், அந்நாட்டின் அரசு அ ற வழி அரசு என்பது பொருளாம் என்பதை உறுதி செய்துள்ளனர். நெடுஞ். சேரலாதன், நல்லரசு நடாத்தும் நல்லோன் என்பதைக்கூற விரும்பிய புலவர், குமட்டுர்க் கண்ணனரும், சாத்தருைம்

48