பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் காட்டிய, அவ்வுத்தியை மேற்கொண்டு, நல்லதே செய்யும் வெள்ளி, கேடுவிளைவிக்கும் செய்வாய்க் கோள்வழி செல்லாது நிற்க, சேரலாதன் நாட்டில், விளைநிலம் வேண்டும் மழை, வேண்டியவாறே பெய்யும்- அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது, மழை வேண்டுபுலத்து மாரி நிற்ப’’ எனக் கூறியிருக்கும் நயம், நினைத்தொறும் இனிமை பயப்பது.

'கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பாரம் ஒம்பி’

என்ற இவ்வரிகள் சொல் அமைப்பாலும், பொருள் செறிவாலும் -

'பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறம் தருகுவை ஆயின், நின் அடிபுறம் தருகுவர் அடங்காதோரே'

என்ற புறநானூற்று வரிகளை (35) நினைவூட்டல் உணர்க.

'கிழங்கு தேடும் ஆண் பன்றிகள் தோண்டுவதால் நிலம் வேறுபட்டுவிடுவதால், உ ழ வ ர், ஏர்கொண்டு உழுவது வேண்டாதே விதைப்பதற்கான அகச்சான்று, "கடுங்கண் கேழல் உழுத பூழி நன்ள்ை வருபதம் நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரு2ளுக்குரல் சிறுதிணை’ (புறம்: 168) என்பதுபோலும் வரிகளில் இருப்பதையும், ப ன் றி யி ன் ஆண், ஏறு என அழைக்கப்பெறும் எனத் தொல்காப்பியர் விதிவகுத் திருப்பதையும் "பன்றி புல்வாய் உழையே கவரி, என்றிவை நான்கும் ஏறு எனற்கு உரிய (தொல். மரபு: 593) கருத்தில்கொண்டு, ஏறுபொறுத செறு உழாது வித்து நவம்'. என்ற தொடரில்வரும், ஏறு என்ற சொல்லுக்கு,"ஆண் பன்றி எனப்பொருள்கொண்டு, பன்றிகள் தம் மருப்புகளால் கிண்டிப்புழுதி ஆக்கிய புலம் எனப் பொருள் கொள்வர்சிலர்.

49