பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சான்ருேர் மெய்ம்மறை

இமயவரம்பன் ஆற்றல், புகழ், அருள், அளப்பரும் செல்வம் ஆகிய நலன்களைக் கேட்டறிந்து, அவனைக் காண வேண்டும் எனும் ஆர்வம் உந்த வந்த புலவர், குமட்டுர்க்கண்ணனுர், அவன் அரசவையில் சிலநாள் வாழப்பெற்றதும், அவன்பால் அமைந்து கிடக்கும் அரும்பெருங் குணங்களைக் கண்ணெதிர்காணும் வாய்ப்பினைப் பெற்ருர்.

நிலத்தையும், நீரையும், காற்றையும், வானத்தையும் அளந்து மதிப்பிடுவது எவ்வாறு இயலாதோ, அவ்வாறே இமயவரம்பன் இயல்புகளையும் அளந்து மதிப்பிடுவது இயலாது. அறிவும், அருளும் நிறைந்து வழியும் அக வொளியைப் புறங்காட்டும் அவன் முகவொளிக்கு, இணையான ஒளியை யாண்டும் காண்பது இயலாது. ஒவ்வொரு நிலையில் நின்று, ஒவ்வொரு காலத்தில், உலகிற்கு ஒளிதருவனவாகிய நாள், கோள், ஞாயிறு, திங்கள், ஊழித்தி அனைத்தும், ஒரிடத்தில் ஒன்று கூடியிருந்து, ஒருசேர ஒளிதந்தால், அவ்வொளி எத்துணைப்பேரொளியாமோ, அத்துணைப்பேரொளி வீசிற்று இமயவரம்பன் இன்முகம். பாரதப்போரில், இயல்பாகவே போர்வன்மை வாய்த்தவராகிய, நூற்றுவர்க்குப் படைத்துணை யளிக்குமளவு பேராற்றல் உடையவனுகிய அக்குரன் என்பவன்பால் அமைத்துகிடந்த கொடைவளம், இவன்பாலும் குடி கொண்டிருந்தது.

எம்மை எதிர்ப்பவர் இந்நிலவுலகில் எவரும் இலர்:

உளரேல் வருக என வஞ்சினம் கூறிய வேந்தர்களை யெல்லாம்வென்று, தம் ஆண்மையை நிலைநாட்டிய மாவீரர்களின்,

52