பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்செருக்கையெல்லாம் அழித்து, வெற்றி கொள்ளவல்ல அடலேருக விளங்கின்ை இமயவரம்பன். தான் கைப்பற்றக் கருதிய உயிரை, அவ்வுயிருடையார், வாழ்க்கையில் எத்துணை உயர்வுடையராயினும், பற்ற நினைந்த நேரத்தில், பிழையறப் பற்றிச் செல்லவல்ல பேராற்றல் வாய்ந்தவன் யமன். அவனே சினந்து செருமேற்கொண்டு வந்தாலும், இமயவரம்பன் அஞ்சான். அவனையும் வென்று துரத்தும் ஆற்றல் அவன்பால் அமைந்து கிடந்தது. மேலும் அத்தகைய பெருஞ்செயல் புரிவதற்கேற்ற, பலம் பொருந்திய உடலமைப்பும், அவனுக்கு வாய்த்திருந்தது. தான்வென்ற பகையரசர் எழுவரின், ஏழு முடிகளையும் அழித்து, அப்பொன்னல் ஆக்கிய அழகிய பெரிய அணியைத் தாங்குமளவு, பரந்து அகன்ற மார்பு, வலிமையுலாவும் பருத்து நீண்ட தோள்கள், ஆகிய உறுப்பு நலத்தால் உயர்ந்துவிளங்கினமையால், போர்க்களத்திற்குப்படைவீரர்கள் முன்னே செல்க. பாய்ந்துவரும் பகைவர் படையாலாம் அழிவினையெல்லாம் அவர்களே ஏற்கட்டும்; பகைவர் தளர்ந்த நிலைநோக்கி இறுதியில் செல்வோம் நாம் என்று எண்ணுமல், போர்க்கவசம், போர்வீரன்உடலை மறைத்துக் காப்பதுபோல், களப்போரில் வீரர்களைப் பின்னே நிறுத்தி முன்னே நின்று போரிட்டு, பகைவர் தாக்குதலையெல்லாம் தானே தாங்கித், தன் படைவீரரைப் பேணிக்காக்கும் பேராண்மை. யுடையவன் இமயவரம்பன்.

இயல்பாகவே பேராற்றல் வாய்ந்தவனகிய அவன்பால், பெரும்படையும் இ ரு ந் த து. மலைநாட்டு மன்னளுகிய அவன் பால், வேழங்கள் மலிந்த உம்பற்காட்டு நாடும் இருந்தமையால், அவன்படையுள் வேழப்படையே சிறந்து விளங்கிற்று. பகைவர்களின் பெரிய பெரிய கோட்டைகளை. யெல்லாம் பாழ்பண்ணத் துணைபுரிவது வேழங்களேயாதலின்,

53